அண்மையில் கல்வி அமைச்சினால் வெளியீடு செய்யப்பட்ட எஸ்பிஎம் தேர்வில் நாடுதழுவிய நிலையில் சிறப்பான தேர்ச்சி பெற்று இந்திய மாணவர்கள் சமுதாயத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் அலை ஒலி ஊடகத்தின் சார்பில் எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். இந்திய மாணவர்கள் மத்தியில் தமிழ்பள்ளியில் படித்த மாணவர்கள் பெருமளவில் எஸ்பிஎம் தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்றிருப்பது பெருமை அளிக்கிறது.
522 total views, 1 views today