English Tamil Malay
Share

“பினாங்கு மலேசிய இந்து தர்ம மாமன்றம் கோரிக்கை

பினாங்கு ஜூன் 12- நாட்டில் இப்போது கோவிட்-19 தொற்றின் தாக்கம் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது. நாள் தோறும் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை புள்ளி விபரங்கள் இதனை நமக்கு தெளிவாகக் காட்டி வருகின்றது.

இந்நிலையில் இந்த நோய் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிபோடும் பணிகளை அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது. “மை-செஜத்திரா” இணைய தளத்தின் மூலமாக முன்பதிவு செய்துகொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஆயினும் இந்த முன்பதிவு நடவடிக்கையில் நமது இந்தியர்கள் பங்கேற்பு எண்ணிக்கை மிக குறைவாக உள்ளதாக புள்ளி விபரங்கள் காட்டுகின்றன.

முன்பதிவு செய்யும் வழிமுறைகள் தெரியாத நிலை, இணையத்தள வசதி மற்றும் கைத்தொலைப்பேசி போன்ற வசதிகள் இல்லாத சூழ்நிலை ஆகியவை அடிப்படைக் காரணங்கள் என்றால் மிகையாகாது.
புறநகர் வட்டாரங்களில் வாழும் நமது இந்தியர்களில் பலர் இத்தகைய வசதியற்ற சூழ்நிலைகளில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு இந்த தடுப்பூசி முன்பதிவு குறித்த விழிப்புணர்வுக்கு நடவடிக்கைகள் அவசியம் மேற்கொள்ள வேண்டும்.

பொது இயக்கங்கள், தன்னார்வ தொண்டர் குழுவினர் இதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மை செஜத்தெரா இணையத்தள வசதிகள் இல்லாத நிலையில் தடுமாறும் நமது மக்களுக்கு நாம் உதவ முன்வர வேண்டும்.

மேலும் இந்த வசதிகள் இல்லாதவர்கள் தங்கள் வட்டாரத்திலுள்ள மருத்துவமனை, அரசாங்க அலுவலகம் அல்லது அரசு சாரா இயக்கத்தின் சேவை மையங்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள முன்வர வேண்டும். ஆகவே சமூக இயக்கங்களும் தன்னார்வ அடிப்படையில் சேவையாற்ற, தயார் நிலையில் இருக்க வேண்டும்.

மலேசிய இந்துதர்ம மாமன்றம் இந்நடவடிக்கைக்கு இயன்ற உதவிகளை வழங்க தீவிர முயற்சிகளை செய்து வருவதாக மலேசிய இந்துதர்ம மாமன்றம் தேசிய இளைஞர் பகுதி தலைவர் மற்றும் பினாங்கு அருள்நிலையத் தலைவரும் பினாங்கு இந்து அறப்பணி வாரிய ஆணையருமான தனபாலன் நந்தகுமார் தெரிவித்தார்.

 4 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *