English Tamil Malay

கல்வி வாழ்க்கையின் நம்பிக்கை ஒளி.ஒரு சமுதாயத்தைக் கல்வி மூலமாக மாற்றி அமைக்க முடியும்.கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட 2020 ஆம் ஆண்டுக்கான எஸ்பிஎம் தேர்வில் சிறந்த தேர்ச்சி அடைந்துள்ள இந்திய மாணவர்களுக்கு முனைவர்.ஆர்.குணசேகரன் பிள்ளை தமது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.தமிழ் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் எஸ்பிஎம் தேர்வில் சிறப்பாகத் தேர்ச்சி அடைந்துள்ளது பெருமையளிக்கிறது.

தமிழ்ப்பள்ளிகள் நமது அடையாளம் என்றும்,அதன் மூலமாக இடைநிலைப்பள்ளியில் கல்வியைத்  தொடங்கிய மாணவர்கள் இன்று எஸ்பிஎம் தேர்வில் இதர இன மாணவர்களுக்கு ஈடாகத் தேர்ச்சி பெற்றுள்ளது பாராட்டத்துக்குறியது என மேலும் முனைவர்.ஆர்.குணசேகரன் பிள்ளை தெரிவித்தார்.

கல்வி என்பது எதிர்காலத்துக்கான கடைப்பிதழை போன்றது அது நாளைய எதிர்காலத்தை நிச்சயிப்பதாக  உள்ளதால் அதனைத் தயார் நிலைப் படுத்தும்  மாணவர்களுக்கு மட்டுமே வாழ்க்கை எதிர்காலத்தில் வசப்படும் என்று தொழிலதிபரான,அன்பே ஆனந்தம் முனைவர் .ஆர்.குணசேகரன் பிள்ளை குறிப்பிட்டார்.

 46 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *