English Tamil Malay


பட்டர்வொர்த்,மாக் மாண்டின் அம்பாங் ஜாஜார் குடியிருப்பு பகுதியஐ சேர்ந்தவரும்,புக்கிட் மெர்தாஜாம் உயர் இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த ஷர்வினா சுப்பையா எஸ்பிஎம் தேர்வில் 10 ஏ 1பி பெற்று சாதனை படைத்துள்ளார்.சுப்பையா வனிதா தம்பதிகளின் புதல்வியான ஷர்வினா தமது சிறந்த தேர்ச்சிக்கு  எனது பெற்றோர்கள்,பள்ளி ஆசிரியர்கள் கொடுத்த ஊக்கம்  காரணமாக அமைந்ததாக அவர் கூறினார்.
தமது எதிர்கால லட்சியம் ஓர் கணக்காளராக  ஆக வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

ஷர்வினா சுப்பையா பட்டர்வொர்த் மாக் மண்டின் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.

இதனுடன்  வட செபராங் பிறை மாவட்டம், போக்கோ சென இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி கனகேஸ்வரி த/பெ முருகன் 9ஏ எடுத்து சாதனை படைத்துள்ளார்.

தமது சிறப்புத் தேர்ச்சிக்கு தமது பெற்றோர்கள் கொடுத்த ஊக்கம்,பள்ளி ஆசிரியர்கள் கொடுத்த பெரும் ஆதரவு தமது சிறந்த தேர்ச்சிக்குக் காரணமாக அமைந்ததாக மு.கனகேஸ்வரி கூறினார்.அனைத்துப் பாடங்களில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மு.கனகேஸ்வரி மலாக்கோப் தமிழ்ப்பள்ளியின் முன்னாள்  மாணவி என்பது குறிப்படதக்கது.

புக்கிட் மெர்தாஜம்,மத்திய மாவட்டம் ஜூருவை சேர்ந்தவரும், புக்கிட் மெர்தாஜாம் கான்வென்ட் இடை நிலைப்பள்ளியில் பயின்ற கெளசலியா அன்பழகன் எஸ்பிஎம் தேர்வில் 5 எ,1பி பெற்று சாதனை படைத்துள்ளார்.அன்பழகன் சுந்தரவதனி தம்பதிகளின் மூத்த மகளான கௌசல்யா தமது எஸ்பிஎம் தேர்வின் சிறப்புத் தேர்ச்சிக்குத் தனது பெற்றார்கள் கொடுத்த ஆதரவு,பள்ளி ஆசிரியர்கள் கொடுத்த வழிகாட்டலுக்கு  நன்றிதெரிவிப்பதாக கெளசலியா கூறினார்.

சிம்பாங் அம்பாட் புக்கிட் தம்புனை சேர்ந்த ஆசைதம்பி பத்மாதேவி தம்பதிகளின் முதல்வரும்,புக்கிட் மெர்தாஜம் உயர் இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த ஹாரீஸ் த/பெ ஆசைதம்பி எஸ்பிஎம் தேர்வில் 7ஏ,3பி,1சி எடுத்து சாதனை படைத்துள்ளார்.


தமது சிறந்த தேர்ச்சி தமது பெற்றோர்கள் கொடுத்த ஆதரவு,பள்ளி ஆசிரியர்கள் கொடுத்த ஒத்துழைப்பு தமது சிறப்புத் தேர்ச்சிக்கு உதவியாக இருந்ததாக ஆ.ஹாரீஸ் தெரிவித்தார்.
ஆசைதம்பி அவரின் துணைவியார் பத்மாதேவி ஆகிய இருவரும் இடைநிலைப்பள்ளியில் தலைமையாசிரியர்,துணை தலைமையாசிரியர் பொறுப்புகளை வகித்து வருகின்றனர்.இந்திய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு ஆசிரியர் ஆசைதம்பி அவர்கள் மலேசிய விவேகம் இயக்கம் மூலமாகக் கல்விச் சேவைப் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 84 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *