English Tamil Malay

அகல்யா

செபராங் ஜெயா, நவ 29 –பினாங்கு மாநில சமூகநல அமைப்புகளின் வரிசையின் தனக்கென்று ஒரு தனி முத்திரையைப் பதிவு செய்து வந்துள்ள மகிழ்ச்சி குடும்பம் என்று அமைப்பு தற்போது பினாங்கு மகிழ்ச்சி உலக சமூகநல இயக்கம் என்ற புதிய பரிணாமத்தில் ஏழைகளின் தோழனாகப் பயணிக்கத் தொடங்கியுள்ளது.

அண்மையில் இந்த இயக்கத்தின் முயற்சியாலும், தோகியோ மெரின் ஆசியா லைஃப் ஏஜன்சி நிறுவனம் மற்றும் சாய் சகோதரர்கள் குழுவின் இணை ஏற்பாட்டில் சுற்று வட்டாரத்தில் உள்ள 30 குடும்பங்களுக்கு 3 ஆயிரம் வெள்ளளி பெறுமானம் உள்ள மளிகைப் உதவிப்பொருட்களை வழங்கிதங்களின் சமூகநல சேவையின் வழி முன்னுதாரண சமூகநல இயக்கமாகவும், தனிமனிதர்களின் கருணை முகங்களாகவும் தங்களை
அடையாளப்படுத்திக் கொண்டார்கள்.

மகிழ்ச்சி உலகம் சமூகநல இயக்கத்தின் பொறுப்பாளர்கள்: உட்படப் பிற அமைப்பு மற்றும் நிறுவனங்களின் நிர்வாகிகளான திரு.சு.மலையரசன், குமாரி லோகேஸ்வரி, திரு.சு.சுதாகர் மற்றும் சாய் சகோதரர்கள் எனும் குழு உறுப்பினர்கள் ஏழை எளிய மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய புது அமைப்பின் வழியாக சமூக ஆர்வலர்கள் ஒன்றுகூடி இருப்பதாக பினாங்கு
மகிழ்ச்சி உலக சமூகநல அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு.சுதாகர் தெரிவிதார்.

மொழி, இனம், சமயம் என்று என்றுப் பாராமல் அனைத்து இனத்திற்கும் உதவக்கூடிய இயக்கமாக பினாங்கு மகிழ்ச்சி உலக சமூகநல இயக்கம் (PERSATUAN KEBAJIKAN DUNIA RIA ) அனைவருக்கும் பாடாற்றும் என்று சுதாகர்
விவரித்தார்.

 40 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *