English Tamil Malay
Share


ஏசிபி அ.அன்பழகன் தகவல்

பாயான் லெப்பாஸ்
ஜூன் 5
ஆர்.தசரதன்

பினாங்கு,தென்மேற்கு மாவட்டத்தில் 3.0 நடமாட்டு கட்டுப்பாட்டு ஆணையை முன்னிட்டு     பாயான் லெப்பாஸ் பிரதான குடியிருப்பு பகுதியான முக்கிம் 12 பகுதியில் கோவிட்-19 தொற்றுக்கான  உரியப் பாதுகாப்புப் பணிகள்    ஜூன் 4 ஆம் நாள் முதல் தொடக்கம் ஜூன் 17 வரை மேற்கொள்ளப்படும்எனத் தென்மேற்கு மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி அ.அன்பழகன் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.


நடமாட்டு கட்டுப்பாட்டு ஆணை 3.0 முன்னிட்டு மேற்கொள்ளப்படும் பணிகள் யாவும் கோவிட்-19 தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பை வழங்க மாவட்ட காவல் துறை முன்னெடுக்கும் பணிகள் எனக் கூறிய அ.அன்பழகன் பொது மக்கள் அரசாங்கம் நிர்ணயம் செய்துள்ள எஸ்.ஓ.பியை கடைப்பிடிக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

இதனுடன் நிலையான சாலை தடுப்பு சோதனைகளை ஜாலான் கம்போங் புக்கிட் மற்றும் ஜாலான் டத்தோ இஸ்மாயில் ஹாசிம் ஆகிய பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்படும் என மேலும் அவர் கூறினார்.
இதனிடையே கீழ்க் கண்ட பகுதியில் உள்ள மக்கள் கோவிட்-19 தொற்றிலிருந்து பத்துக்காக உரிய நடவடிக்கை எடுக்கத் தென்மேற்கு மாவட்ட காவல் துறை உரியக் கவனம் செலுத்தும் என்றும் அதில் ஜாலான் பாயூ,பாயு தியாரா,பாயு ஞாமான்,ஹாலாமான் முர்னி,பாயான் பெர்மாய்,பாயான் தாயார்,தாமான் அரா இண்டா,கம்போங் பெர்லிஸ்,கம்போங் மஸ்ஜிட்,ஜாலான் மக்காமா,ஜாலான் கம்போங் பாக் லா,மற்றும் லெபோ கம்போங் புக்கிட் அகிய பகுதிகள் அடங்கும் என ஏசிபி அ.அன்பழகன் விவரித்தார்.


 2 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *