ஆர்.தசரதன்
கோலாலம்பூர் ஜூன் 2-மலேசியா வான்வெளியில் சீனா நாட்டைச் சேர்ந்த 16 ராணுவ விமானங்கள் அத்துமீறி நுழைத்திருப்பதை மிகவும் கடுமையாக கருதுவதாக வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் சீன நாட்டு அரசாங்கத்திடம் மலேசியா தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும். மேலும் மலேசியாவுக்கான சீன தூதரை அழைத்து விளக்கம் கோரப்படும் என்றார் அவர் கூறியுள்ளார்.
மலேசியா தனது பாதுகாப்பை நிறுத்திக்கொள்ள தொடர்ந்து போராடும் என்றார் அவர்.
நேற்று கோத்தா கினபாலு வான்வெளியில் சீனா வின் 16 இராணுவ விமானங்கள் அத்துமீறி நுழைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்று மலேசியா ஆகாயப்படை இராணுவத் தளபதி ஜெனரல் டான்ஸ்ரீ அப்துல் சாமட் தெரிவித்தார்.
நாட்டின் வான்வெளி பாதுகாப்புக்கு இது மிரட்டலை ஏற்படுத்தி இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மலேசியவின் பாதுகாப்புக்கு மிரட்டல் கொண்ட இந்த அத்து மீறிய சம்பவம் முழுமையாக விச்சாரணை செய்யப்படும் என டத்தோஸ்ரீ இஷா மூடின் விவரித்தார்.
284 total views, 1 views today