English Tamil Malay
Share

ஆர்.தசரதன்

பினாங்கு ஜூன் 2-பினாங்கு மாநில தென்மேற்கு மாவட்ட காவல் துறை தலைவராக பதவி வகித்து வரும் சுப்பிரின்டென்டன் அ.அன்பழகன் காவல் துறையின் ஏசிபி எனும் பதவி உயர்வைப் பெற்றார்.

தென் மேற்கு மாவட்டத்தில் துடிப்பு மிக்க இந்திய காவல் தலைவராக சிறப்புடன் சேவையாற்றிவரும் ஏசிபி அ.அன்பழகன் இம்மாவட்டத்தில் குற்ற செயல்,போதைப்பொருள் நடவடிக்கை மற்றும் பல்வேறு குற்றச்செயல் சம்பவங்களை குறைப்பதுடன்,அதனை முறியடித்து உடனுக்குடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதில் சிறந்து விளங்கும் மாவட்ட காவல்  தலைவராக இருந்து செயல்படுகிறார்.

காவல் துறையில் சேவையாற்றிவதில்  மற்றுமின்றி ஆயர் இத்தாம் பகுதியில் உள்ள ஸ்ரீ ஓம் முனீஸ்வரர் ஆலயத்தின் ஆலோசகராக இருப்பதுடன் ஆலய திருப்பணி,வட்டார மக்களின் கல்வி,பொருளாதார வளர்ச்சிக்கும் வசதி குறைந்த மக்களுக்கான மரண வாகன சேவை ஆகிய திட்டங்கள் வெற்றியுடன் செயல்படுவதற்க்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து விருகின்றார் என்பதும் குறிப்பிடதக்கது.பதவி உயர்வு பெற்ற ஏசிபி அ.அன்பழகனுக்கு அலை ஒளி ஊடகம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *