English Tamil Malay

ஆர்.தசரதன் 

அலோர் ஸ்டார்,24 மலேசியத் தாய்லாந்து எல்லைப் பகுதியில் கெடா காவல் துறையினர் போதைப்பொருள் விநியோகித்து கும்பலின் நடவடிக்கையை முறியடித்தது,18 மில்லியன் மதிப்புடைய போதைப்பொருளைக் கைப்பற்றியதாக,கெடா காவல் துறைத் தலைவர் ஆணையர் டத்தோ ஹாசனுடின் ஹாசன் கூறினார்.

நான்கு போதைப்பொருள் விநியோகித்து கும்பலின் நடவடிக்கையுடன் சிறப்பு அதிரடி நடத்தப்பட்டதாகக் கூறிய டத்தோ  ஹாசனுடின்,கடந்த புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய நாட்களில் ஐந்து தாய்லாந்து நாட்டு ஆடவர்கள் மற்றும் உள்நாட்டை  சேந்த  32 வயது முதல் 48  வரை மதிக்க தக்க இரண்டு ஆடவர்களை காவல் துறை கைது செய்ததாகக் கூறினார்.

கடந்த புதன்கிழமை ஜாலான் பாடங் சாணை சாலையில் வாகனத்தில் வந்த 28 வயது மதிக்கதக்க  தாய்லாந்து ஆடவர் ஒருவரின் காரை சோதனை செய்ததில்,வாகனத்தின் பின்னல் 18 மில்லியன் மதிப்புடைய 108 கிலோ கிராம் எடையாகக்கொண்ட போதைப்பொருளைக் காவல் துறையினர் கைப்பற்றியதாகத் தெரிவித்தார்.

இரண்டாவது அதிரடி நடவடிக்கையானது சிம்பாங்  செதுலாங்   பாடங் தெரப்  பகுதியில் உள்நாட்டை சேந்த அடைவர் ஒருவர் மற்றும் தாய்லாந்து நாட்டு ஆடவருடன் மிட்சுபிஷி ரக வாகனத்தில் வந்த போது  அவர்களின் காரை சோதனை செய்ததில் வே 20,000 மதிப்புடைய 775 .கிலோ கிராம் மதிப்புடைய வே ௨௦,௦௦௦ பெருமணமுடைய கஞ்சா ரக போதைப்பொருளைப் பறிமுதல் செய்ய்யப்பட்ட்து என்கிறார் அவர்.

கைபற்ற்ப்பட் வாகனம்


இதனிடையே தாய்லாந்து எல்லைப் பகுதியில் தாய்லாந்து நாட்டு ஆடவர் ஒருவரைக் காவல் துறையினர் கைது செய்ததுடன்,அப்பகுதியில் போதைப்பொருள் விநியோகம் நடைபெறுவதற்கான கூடாரங்கள் கண்டு பிடிக்கப்பட்டது என மேலும் அவர் விவரித்தார்.

கைது செய்யப்பட்ட அனைவரும் போதைப்பொருள் அபாயகர சட்ட ஆண்டு 1952 செக் ஷன்   பி பிரிவில் குற்றம் சுமத்தப்படும் எனத் தெரிவித்த டத்தோ ஹாசனுடின்,இந்த சிறப்பு போதைப்பொருள் துடைத்தொழிப்பு நடவடிக்கைக்குக் காவல் துறையும்,பிஜிஎ எனும் ஆகாயப்படை சிறப்புக் காவல் துறை ஒத்துழைப்பு வழங்கியதாக அவர் சொன்னார்.

 34 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *