English Tamil Malay

ஜோர்ஜ்டவுன்

மே 30

ஆர்.தசரதன்

பினாங்கு மக்களுக்குக் குறிப்பாக பி40 மக்களுக்கான மரண சம்பவம் நடக்கும் போது பொருளாதார சிக்கலைத் தவிர்ப்பதற்கு உதவி வருகிறார் ஜோர்ஜ்டவுன் அம்மா அமிர்தமாயி இயக்க தலைவர் காளிதாஸ் குழைந்தவேலு.

பி40 மக்கள் குறிப்பாக வசதி குறைந்த மக்கள் குடும்பங்களில் ஏற்படும் இறப்பு சம்பவம் அவர்களைப் பெறும் பொருளாதார சுமையை ஏற்படுத்தி வருகிறது.

கு.காளிதாஸ்

அவர்கள் தங்களின் நகைகளை அடகுக் கடைகளில் அடமானம் வைத்தும்,வட்டி முதலைகளிடமிருந்து பணம் பெற்று இறுதிச் சடங்குகளை நடத்தி வருகின்றனர்.

பொருளாதார சிறமத்துக்குள்ளகும் வசதி குறைந்த மக்கள் பெறும் மன வேதனை போக்குவதற்கு அம்மா அமிர்தமாயி இயக்கத்தின் மூலமாக மரண அமரர் ஊர்தி ஒன்றை பினாங்கு அன்பே சிவம் நிறுவனத்துக்குத் தாம் அன்பளிப்பாக வழங்கியுள்ளதாகத் தொழிலதிபர் காளிதாஸ் குழந்தைவேலு தெரிவித்தார்.

மரணம் சம்பவம் வசதியற்ற குடும்பங்களில் ஏற்பட்டு விட்டால் அதிலிருந்து மீளுவது சில நாட்களாகலாம்,அதுவும் வசதி இல்லாத குடும்பங்கள் நிதிச் சுமையால் மிகவும் வாடிப்போவர், அவர்களுக்கு உதவு பொருட்டு பினாங்கு மாநிலத்தில் ஜோர்ஜ்டவுன் அம்மா அமிர்தமாயி இயக்கம் மூலமாக இந்த அமரர் ஊர்தி வாகனம் பி40 மக்களுக்குப் பொருளாதார சுமையைக் குறைக்கப் பயனுள்ளதாக அமையும் என காளிதாஸ் குமரவேலு நம்பிக்கை தெரிவித்தார்.

பினாங்கு தீவி உள்ளிட்ட செபராங் பிறை பகுதிகளில் உள்ள மக்களின் வசதிக்கு ஏற்ப இந்த அமரர் மரண ஊர்தி சேவை வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனத் அலை ஒளி ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில் காளிதாஸ் குமரவேலு குறிப்பிட்டார்.

குறைந்த விலையில் மக்களின் தகுதிக்கு ஏற்ப அன்பே சிவம் நிறுவனம் இதனைச் செய்யும் என்பதுடன் இதனால் மற்ற மரண சேவைகளை வழங்கும் நிறுமங்களுக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்கிறது என்பதுடன் இவை பி40 மக்களுக்கான சேவையாகக் கருதப்படும் என காளிதாஸ் கூறினார்.

ஆ.கோபி

தொடர்புக்கு அன்பே சிவம் நிறுவனம் கோபி ஆறுமுகம் 016-4879255

 112 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *