English Tamil Malay

சஞ்ஜெய்

சென்னை, நவ,27 நிவர் புயலால் சென்னையில் 267 மரங்கள் வேரோடு சாய்ந்தனசென்னையில் புயல் காரணமாக, 24 மணி நேரத்தில், 267 மரங்கள் வேரோடு சாய்ந்தன.

‘நிவர்’ புயல் கரையை கடந்துள்ள நிலையில், அதன் தாக்கம் சென்னை மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

தாழ்வான பகுதிகளில் வசித்த பொதுமக்கள், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, 8:00 மணி முதல் நேற்று காலை, 8:00 மணி வரை, பல்வேறு வகையான, 267 மரங்கள் வேரோடு சாய்ந்தன.

அதில், நேற்று முன்தினம் மாலை வரை, 100க்கும் குறைவான அளவில் மரங்கள் சாய்ந்தன.இரவில் அடித்த காற்றினால், 150க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்துள்ளன. இந்தாண்டில் இதுவரை, சென்னையில் மட்டும், 609 மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதாக, மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

 38 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *