English Tamil Malay

ஆர்.தசரதன்

ஜூரு,நவ 28 மத்திய, செபராங் பிறை மாவட்ட பகுதியில் இந்திய பலகாரங்கள் சிறு தொழில் விற்பனையில் துறையில் சாதனை புரிந்து வருகின்றனர் கோகிலா சுபாஷ் தம்பதியினர்.கடந்த 9 ஆண்டுகாலமாக சொந்த வியாபாரத்தில் குறிப்பாக பல்வகை இந்திய பலகாரங்களை சைவமான முறையில் தயாரித்து,இங்குள்ள ஜூரு இரவு சந்தை விற்பனை பகுதியில் இத்தம்பதியினர் கூடாரத்தை அமைத்து பலகாரங்களை விற்பனை செய்து வருகின்றனர்.

இதற்க்கு முன்னர் புக்கிட் தெங்கா தொழிற்சாலை பகுதிகளில் பாலகார விற்பனையை தொடங்கி தற்போது நிரந்தரமாக தற்போதைய ஜூரு பெர்கம்போஙான் இரவு சந்தை பகுதியில் தங்களின் வியாபாரத்தை செய்து வருவதாக கோத்த பெர்மாய் குடியுருப்பு பகுதியை சேர்ந்த இந்த ம.கோகிலா சுபாஷ் தம்பதியினர்.

தங்களின் சிறு ரக வியாபாரம் தொடங்குவதற்கு அரசாங்கம் வழங்கிய தெக்கும் கடன் உதவி மூலமாக வெ 10,000 பெற்று முதலீடாக சொந்த வியாபாரம் செய்ய தொடங்கியதாகவும் இந்த உதவி தொகை தங்களை போன்ற சிறு வியாபாரிகளுக்கு உறுதுணையாக இருந்ததாக நன்றி பெருக்கத்துடன் கோகிலா கூறினார்.

தங்களுக்கு இரு பிள்ளைகள் இருப்பதாகவும் முத்த மகள் பல்கலைக்கழகத்தில் படித்து வருவதுடன்,இரண்டாம் மகள் ஆறம் படிவம் படிப்பதாகவும் கோகிலம் கூறியதுடன் சொந்த வியாபாரம் எங்களுக்கு வாழ்வாதாரமாக இருப்பதாக தெரிவித்தனர்.பல்லின மக்கள் தங்கள் கடையில் விற்பணை செய்யும் பலகாரங்களை வாங்கி ஆதரவு வழங்கி வருவதுடன்,தங்களின் பலகாரங்கள் அனைத்தும் சுத்தமாகவும் சகாதாராமாகவும் உடனுக்கு உடன் தங்களின் கடையில் தயார் செய்யப்படுவதாககோகிலாவின் கனவர் சுபாஷ் குறிப்பிட்டார்.

சொந்த வியாபாரம் செய்வதில் இந்தியர்கள் ஈடுபட வேண்டும் என்றும் அதற்க்கு குடும்ப உறுப்பினர்கள் துணையாக இருந்தால் அனைவரும் சாதிக்கலாம் என்றும் அதற்க்கு நம்பிக்கை,நாணயம் ஆகியவை வியாபாரத்தில் முக்கியமாக இருக்க வேண்டும் என கோகிலா அலை ஒலி ஊடகத்திடம் பகிர்ந்துக்கொன்டார்.

எங்கள் கடை காலை 11.00.முதல் மாலை 5.00 மணிவரை கடை திறந்திருக்கும் என்பதுடன் தங்களின் பலகாரக் கடையில் விற்பனையாகும் மசால் வடி,பருப்பு வடை,சமோசா,சுருள் அப்பம்,போன்டா மற்றும் பல்வகை பலகாரங்களை முன் பதிவு செய்ய நினைப்பவர்கள் 016-4569507 எனும் கை பேசி எண்ணில் தம்மை தொடர்புக்கொள்ளலாம் என கோகிலா குறிப்பிட்டார்.

 106 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *