English Tamil Malay

ஆர்.தசரதன்/அகல்யா

ஜோர்ஜ்டவுன் மே 19-பினாங்கில் இந்தியப் பாரம்பரியம் மாறாமல் தங்க ஆபரணங்களைச் செய்து வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெற்று வருகிறார் ராஜூ முருகேசன் பத்தர்.

தமிழகத்திலிருந்து மலேசியாவுக்கு 1992 ஆண்டில் வருகையளித்த மு.ராஜூ பத்தர் மற்றும் அவரின் அவரின் துணைவியார் தனலக்‌ஷ்மி வீரப்பன் தம்பதியினர் தங்க ஆபரணம் குடும்பத்தில் மூன்றாவது தலைமுறையாகத் தங்க வனிபத்தில் ஈடுபாடு காட்டு வருகிறார். 

புக்கிட் மெர்தாஜம் பட்டணத்தில் பொற்கொல்லர் வியாபாரத்தில் கை தேர்ந்தவராக இருந்த மு.ராஜூ  பத்தர் நம்பிக்கை,நாணயம் மற்றும் இந்தியப் பாரம்பரியம் மாறாமல் கை ராசி உடைய தங்க நகைகளை வடிவமைக்கும் பத்தராகத் தன்னை நாடி வரும் வாடிக்கையாளர்களுக்குப் பிடித்த டிசைன்களில் நகைகளைச் செய்து கொடுக்கும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

ராசி கற்கள்

1991 ஆம் ஆண்டு வீ.தனலக்‌ஷ்மி என்பவரைத் திருமணம் செய்த மு.ராஜூ பத்தர்,2001 ஆம் ஆண்டு ஜோர்ஜ்டவுன் நகரில் தனது தங்க ஆபரணங்களைச்   செய்து கொடுக்கும் வியாபாரத்தை  தனாஸ் தங்க வணிக  நகைக்கடை எனும் பெயரில் திறந்து மு.ராஜூ பத்தர் இந்தியப் பாரம்பரியம் சிறிதும் மாறாத வகையில் திருமணம்,காதணி விழா,ஆலயங்கள்  எனப் பல்வகை சுப காரியங்களுக்குத் தேவையான தங்க நகைகளை வடிவமைத்து தமது வாடிக்கையாளர்களைத் தக்க வைத்தும் வந்துள்ளார்.

தங்க ஆபரங்கள்

நகைகள் செய்வது மட்டும் அல்லாமல் ஒவ்வொருவருக்கு உரிய இராசியைப் பொருத்தமான இராசி கற்களைத் தேர்வு செய்தும் தங்கத்திலான மோதிரங்களைச் செய்து தருவதிலும் மு.ராஜூ தனித்தன்மை  கொண்டு திகழ்ந்து வருகிறார்.

இந்த நவ நாகரீக காலத்தில் நவீன வகையான தங்க ஆபரணங்கள் சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டாளும்,இந்தியப் பாரம்பரியமான  முறையில் தங்க ஆபரணங்களை செய்வதற்கு விரும்பி பலரும் தமது சேவையை நாடி வருவதாகப் பெருமிதத்துடன் அலை ஒளி ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில் மு.ராஜூ மனம் திறந்து பேசினார்.

மூக்குத்தி,மோதிரம்,அட்டிகை,தெய்வ உருவங்களுக்கான கீரிடம் உள்ளிட்ட பல்வகை வடிவங்களில் தங்கத் தகட்டில் அமைக்கும் சேவைகளையும் தாம் செய்து வருவதாக மு. ராஜூ குறிப்பிட்டார்.
மு.ராஜூ அவர்களின் சேவையை நாட விரும்பும் பொது மக்கள் மற்றும் வாடிக்கையாளர் எண் 38,லெபோ குயின்,102000 ஜோர்ஜ்டவுன்,பினாங்கு எனும் முகவரியில் உள்ள தனாஸ் கோல்ஸ்மிஸ்ட் எனும் முகவரியில் மு.ராஜூ அவர்களை கை தொலைப்பேசி எண் 016-482 8644 அல்லது அலுவலக தொலைப்பேசி எண் 04-2633541 எனும் எண்ணில் தொடர்புக் கொள்ளலாம்்.

https://www.facebook.com/104199558141008/posts/245615803999382/?app=fbl


 24 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *