தி. கிரிஷன்
மலேசிய இந்து சங்கம் பினாங்கு மாநில வட்டாரப் பேரவையும் ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிரமும் இணை ஏற்பாட்டில் சுவாமி விவேகானந்தர் அவர்களின் 162-வது அகவை நன்னாள் பினாங்கு ராமகிருஷ்ண ஆசிரமத்தில் நடைப்பெற்றது.

சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலைக்கு மலர்த் தூவி மரியாதை செலுத்தி நினைவு கூறும் வகையில் பல நிகழ்ச்சிகளையும் ஏற்பாட்டு குழு ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியில் 5 சாதனை இளைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
மலேசிய இந்து சங்கம் பினாங்கு மாநில வட்டாரப் பேரவையின் தலைவர் விவேக ரத்னா ஏ.தர்மன், இராமகிருஷ்ண ஆசிரமத்தின் துணைதலைவர் கே.ராமசாமி, மாநில பேரவை இளைஞர் பிரிவு தலைவர் சிவ ஸ்ரீ விவேக ரத்னா தினேஷ் வர்மன் மாநில பேரவை மகளிர் தலைவர் ஆர். மேகலா ஆகியோர் முன்னிலையில் இவ்விருது 5 சாதனையாளர்களுக்கு வழங்கப்பட்டது.
அவ்வரிசையில் கத்தாரில் 12 தங்கங்களைச் சிலம்ப மாணவர்கள் பெற்றுச் சாதனை புரிய பயிற்சியினை வழங்கிய சிலம்பப் பயிற்றுநர் திரு ரவீந்திரன் அவர்களும், ம.இ.கா பினாங்கு மாநிலத் தொகுதியின் இளைஞர் பிரிவுத் தலைவர் த. ரூபராஜ் அவர்கள் பினாங்கு மாநில மக்களுக்குச் செய்த சேவைகளுக்காக நம்பிக்கைகுரிய இளம் தலைவர் என்னும் விருதினையும் இசைத் துறையில் சாதனைப் புரிந்து மக்களின் மனத்தை வென்ற திலீப் வர்மன் அவர்களும் சமயக் கல்வி சேவையை வழங்கிவரும் ஹரிபிரசாட் சிறந்த சமயக் கல்வி சேவையாளராகவும் சமயச் சேவைக்காக மலேசிய இந்து சங்கம் புக்கிட் பெண்டேரா வட்டாரப் பேரவையின் தலைவர் எம்.சிவகுரு போன்றோர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
58 total views, 1 views today