அலை ஒளி ஊடகத்துக்கு கிடைத்த அங்கீகாரம் அலை ஒளி நிர்வாக இயக்குநர் முனியாண்டி மாணிக்கம் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
(சத்யா பிரான்சிஸ் )
ஜோர்ஜ்டவுன டிசம்பர் 8-சிறு தொழில் முனைவர்களுக்காக பினாங்கு, கொம்டார் பிராங்கின் மாஃல் மண்டபத்தில் நடத்தப்பட்ட சிறப்பு விருந்து நிகழ்ச்சியில் அலை ஒளி ஊடக செய்தியாளருக்கு விருது வழங்கப்பட்டது. அலை ஒளியின் சார்பாக அதன் செய்தியாளர் சத்யா பிரான்சிஸ் அந்த விருதைப் பெற்றுக் கொண்டார்.
இவருக்கு இந்த விருதை இ3 குளோபல் நிறுவனத்தின் இயக்குனர் ஜெக் தாஃன் வழங்கினார்.உலகலாவிய நிலையில் வணிக தொழில் முனைவர்களை ஒன்றினைக்கும் eBizstart 2024 நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற அலை ஒளி ஊடகம் தேர்வு பெற்றதை அங்கீகரிக்கும் வகையில் அலை ஒளி ஊடகத்துக்கு சிறப்பு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.
இ 3 செயல் திறன் மிக்கோர் சிறு தொழில் முனைவர்களுக்காக நடத்திய நடத்திய விருந்தினர் நிகழ்ச்சியில் இ 3 பவுண்டேஷன் நிறுவனத்தின் தலைவருமான புரொபசர் என்ரு வோங், இ 3 துணை நிறுவனருமான கெல்வின் குவா, சி 3 நிர்வாக இயக்குனர்,
இ 3 2024 ஆண்டிற்கான நிகழ்ச்சி இயக்குனர் எம் கே.போஃவுல், இ 3 திறன் மிக்கோர் விருந்து நிகழ்ச்சியின் தலைவரான டேவிட் வோங் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கெடுத்து சாதனை புரிந்தவர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர்.
ஒரு வாரத்திற்கான கருத்தரங்கை மிகவும் சிறப்பாக சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்திய செயல்திறன் மிக்கோர் குழுவின் தலைவரான எம். கே. போஃவுல் அவர்களுக்கும் விருதளித்து சிறப்பிக்கப்பட்டார்.
ஞாயிறு இரவு நடைபெற்ற சிறப்பு விருந்து நிகழ்ச்சியில் சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், துபாய், போன்ற நாடுகளில் இருந்தும் நம் நாட்டில் இருந்தும் 300க்கும் அதிகமான சிறு தொழில் முனைவர்கள் பங்கெடுத்தனர்.ஊடக துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் அலை ஒளி ஊடகத்திற்கு அங்கிகாரம் வழங்கிய eBizstart 2024 ஏறபாட்டு குழுவினருக்கு அலை ஒளி ஊடக நிர்வாக இயக்குநர் முனியாண்டி மாணிக்கம் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
32 total views, 1 views today