English Tamil Malay

அகல்யா
கோலாலம்பூர் நவ. 7-மொழியின் நிலைத்தன்மைக்கு, உரமிட்டு புதுமைப்படுத்துதல் அவசியம் என்பதனை முதன்மை நோக்கமாகக் கொண்டு, தேசிய ஒற்றுமைத் துறை அமைச்சின் கீழ்செயல்படும் தேசிய ஆவணக்காப்பகம் நடத்திய “2024 தேசிய பேச்சு வழக்கு மொழி மாநாடு: சமூக மொழியின் வலிமையைப் பாதுகாத்தல்” என்ற தலைப்பிலான கருத்தரங்கையொட்டி நடத்தப்பட்ட கண்காட்சியில் தமிழ் கலிகிராப்பி (தமிழ் வனப்பெழுத்துக்கு) மலேசியா புத்ரா பல்கலைக்கழகம் மகுடம் சூட்டியது.

புத்ரா பல்கலைகழகத்தின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத் துறை தலைவர் துணைப் பேராசிரியர் முனைவர் முகமட் ஜொஜாரி முகமட் யூசோப் அவர்களின் ஆதரவில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் தமிழ் வனப் பெழுத்து களால் வரையப்பட்டிருந்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ஒற்றுமைத்துறை அமைச்சர் ஆரோன் அகோ டாகாங் ஆகியோரின் ஓவியங்களுடன் தமிழ் கலிக்கிராப்பி எழுத்துகளால் உருவாக்கப்பட்ட தபால் தலைகள் ஆகியவை கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

கண்காட்சியை பார்வையிட்ட அமைச்சர் ஆரோன் அகோ டாகாங், தமிழ் கலிக்கிராப்பியைக் கொண்டு வரையப்பட்ட தனது படத்தைப் பார்த்து மகிந்தார்.

மலேசிய புத்ரா பல்கலைகழகத்தின் சார்பில் அந்த ஓவியம் அமைச்சருக்கும் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.

தமிழ் கலிகிராப்பி எழுத்துகளின் மூலம் அந்த ஓவியங்களை வரைந்த புத்ரா பல்கலைகழகத்தின் வடிவமைப்புத் துறை விரிவுரையாளர் முனைவர் வேலு பெருமாள் அமைச்சருக்கு ஓவியத்தை வழங்கினார்.

எல்லா மொழிகளின் சிறப்பையும் தொன்மையையும் தேசிய ஆவணக்காப்பகம் பாதுகாக்கும். அந்த முயற்சியின் ஓர் அங்கமாக தமிழ் கிராப்பி இந்தக் கண்காட்சியில் முன்னிலைப்படுத்தப்பட்டது என்று மலேசிய தேசிய ஆவணக்காப்பகத்தின் தலைமை இயக்குனர் டத்தோ ஜாப்பார் சீடேக் பின் அப்துல் ராஹ்மான் குறிப்பிட்டார்.

 35 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *