English Tamil Malay

தென் கொரியா, சியோல்தலைமையகம் கொண்ட இயக்கத்தின் வழி உலகஅமைதி நோக்கத்தை மையமாக கொண்டு வரும் 6.10.2024 ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர் புக்கிட்பிந்தாங், அமோட கட்டடத்தில் மலேசிய ரீதியில்உலக அமைதி மாநாடு நடைபெறவுள்ளது.

10 ஆம் ஆண்டு உலக அமைதி நிறைவு விழாவினை முன்னிட்டு உலக அமைதிக்காககூட்டப்படும்.இம் மாநாடு பல மதம் சார்ந்த தலைவர்களைக் கொண்டு கலந்துரையாடல் அங்கம் நடைபெறும்.

“உலக அமைதிக்காக, சமய ரீதியில் எதிர் நோக்கும் சவால்களையும் அவற்றை களைய எடுக்கும் நடவடிக்கைகள்” எனும் கருபொருளைக்கொண்டு பல சமயத் தலைவர்கள் பங்கு கொள்வார்கள்.அலை ஒளி ஊடக தலைமை ஆசிரியர் ர. நவநீத கிருஷ்ணனும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்.

அவர்களில் இந்து சமயம் சார்பில் நெகிரி செம்பிலான் சமூக நலன்,கலைக்கலாச்சாரம், நன்னெறி இயக்கமான “மைக்கல்சர்”தலைவரும் உலக இந்து சபா என்னும் World Hindu Federation (WHF ) எனும் இயக்கத்தின் அனைத்துலக செயலளருமான “சங்கரத்னா”டாக்டர் வே.கந்தசாமி அவர்கள் வருகையாளர்களுக்கு பாராட்டு தெரிவிப்பார்.

HWL மலேசியத் தலைவர் நிங் அவர்களும், வேயின் அவர்களும் இந் நிகழ்வில் பல மதம் சார்ந்த இளைஞர்களும் சமய ஆர்வலர்களும் திரளாக கலந்து சிறப்பிக்க உள்ளனர். இந்நிகழ்வுநேரலையாக பல நாடுகளுக்கு ஒலிபரப்பப் படும் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது, வளைகுடா நாடுகளில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போர்களும் இன்னும் பல சமய அடிப்படையில் நடந்து வரும் கலவரங்களையும்நாடுகளுக்கும் ஜக்கிய நாட்டு சபைக்கும்அனுப்புவதற்கு இம்மாநாட்டில் அனைவரது கையொப்பமும் மகஜரில் இடம் பெறும் என்று டாக்டர் வே.கந்தசாமி தெரிவித்தார்.

 54 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *