English Tamil Malay

புக்கிட் மெர்தாஜம், மத்திய மாவட்டம் பெர்மாத்தாங் திங்கி தாமான் தெகோ,ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் ஆலய மன்டாலபிஷேக உபயத்தை பினாங்கு மாநில அன்புக் கரங்கள் இயக்கத்தின் சார்பில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த சிறப்பு  உபய நிகழ்வில் பினாங்கு இந்து அறப்பணி வாரிய நிர்வாக இயக்குநர் டத்தோ மு.இராமசந்திரன்,தொழிலதிபர்,முனைவர் ஆர் குணசேகரன் பிள்ளை உடன் பினாங்கு அன்புக் கரங்கள் இயக்க தலைவர் கருணாகரன் மற்றும் செயலவை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் சிறப்புப் பூஜையில் கலந்து சிறப்பித்தனர்.


ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் ஆலய சார்பில் சிறப்புப் பிரமுகர்களாக வருகையளித்த டத்தோ மு.இராமசந்திரன் மற்றும் தொழிலதிபர் ஆர்.குணசேகரன் ஆகியோர்களுக்கு ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் ஆலயம் மற்றும் பினாங்கு அன்பு கரங்கள் சார்பில் பரிவட்டம் கட்டி மாலை அணிவித்துச் சிறப்புச் செய்தனர்.இதனுடன் சிறப்பு வழிபாட்டுக்குப் பிறகு பக்த பெருமக்களுக்குப் பிரசாதம்  வழங்கப்பட்டது.

 32 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *