செப்பாங் ஆக 5-சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தின் நிங்போ நகரிலிருந்து கோலாலம்பூர் மற்றும் கோத்தா கினபாலுவிற்கு ஏர் ஆசியாவின் தொடக்க விமானங்கள் நேற்று முன்தினம் வந்தடைந்தது.
நிங்போ நகரிலிருந்து 90 விழுக்காடு பயணிகளுடன் கேஎல்ஐஏ2 அனைத்துலக விமான நிலையம் வந்தடைந்த AK 181
விமான பயணிகளை மலேசியா சுற்றுலாத்துறை துணைத் தலைவர் டத்தோ இயோ சுன் ஹின், மலேசியா சுற்றுலாத்துறை தலைமை இயக்குனர் மனோகரன் பெரியசாமி, மலேசியா சுற்றுலாத்துறை (ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா) அனைத்துலக மேம்பாட்டு இயக்குனர் நுவால் பாடிலா,ஏர் ஆசியா அரசாங்க தொடர்புகள் பிரிவு தலைவர் மற்றும் ஏர் ஆசியா அனைத்து நட்சத்திரங்கள் அன்பளிப்பு கைப்பைகளை வழங்கி அன்புடன் வரவேற்றனர்.
லிங்ஷே நிங்போ அனைத்துலக விமான நிலையத்திலிருந்து பிற்பகல் 12.55 க்கு புறப்பட்ட விமானம் மாலை 7 மணிக்கு கோலாலம்பூர் வந்தடைந்தது.
இதனிடையே நிங்போ நகரிலிருந்து கோத்தா கினபாலு வந்தடைந்த விமான வருகையை ஏர் ஆசியா கொண்டாடியது.
100 விழுக்காடு பயணிகளுடன் வந்து அடைந்த AK 1519 விமான பயணிகளை சபா சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டுத் துறை துணை அமைச்சர் டத்தோ ஜொனிஸ்டன் பெங்குவாய்,சபா சுற்றுலாத்துறை வாரிய தலைமை செயல்முறை அதிகாரி ஜூலினஸ் ஜெப்ரி,ஏர் ஆசியா மலேசியா தலைமை இயக்குனர் டத்தோ கேப்டன் ஃப்ரே மாஸ்புத்ரா மற்றும் ஏர் ஆசியா அதிகாரிகள் அன்பளிப்பு கைப்பைகளை வழங்கி அன்புடன் வரவேற்றனர்.
மாலை 5.05 மணிக்கு கோத்தா கினபாலு அனைத்துலக விமான நிலையம் வந்தடைந்த விமானத்தை தண்ணீர் பீரங்கி மரியாதையுடன் வரவேற்றனர்.
சீனாவில் மிகப்பெரிய அந்நிய விமான நிறுவனமான ஏர், அந்நாட்டின் வான் போக்குவரத்து துறையில் முக்கி பங்காற்றுகிறது.
சீனாவில் 19 நகரங்களுக்கு ஏர் ஆசியா தனது விமான சேவையை மேற்கொண்டு வருகிறது.
மலேசியாவிற்கு வருகை புரியும் அனைத்து சீன பயணிகளுக்கும் இலவச விசா சலுகையை மலேசியா அரசாங்கம் வழங்கி வருகிறது.
15 total views, 2 views today