மலாக்கா ஆக 4-மலேசியகளுக்கிடையே ஒற்றுமை உணர்வு வழுபட வேண்டும் என தேசிய ஒற்றுமை துறை துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி வலியுறுத்தினார்.
இந்நாட்டில் உள்ள பல இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வு வலுபெற நாம் ஒன்றுபட வேண்டும் என்றார் அவர்.
நேற்று இங்கு மலேசிய பாபா நோன்யா சமூக சங்கத்தின் கலாச்சார விழாவை தொடக்கி வைத்து அவர் பேசினார்.
மலேசிய சமூகத்தில் பல இன மற்றும் மதங்கள் இருந்த போதிலும் புரிந்துணர்வு மற்றும் நல்லிணக்கம் வலிமையுடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
பல இனங்கள் வாழும் இந்நாட்டில் நல்லிணக்கத்தின் அவசியத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.
மலாக்காவில் பாபா நோன்யா சமூகத்தினரின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் மிகவும் போற்றத்தக்க ஒன்று என்றார் அவர்.
மலேசியாவில் ஒற்றுமையின் சின்னமாக பாபா நோன்யா சமூகத்தினர் விளங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
பாபா நோன்யா சமூகத்தினர் நல்ல புரிந்துணர்வு மற்றும் ஒற்றுமை உணர்வுடன் வாழ்ந்து வருவது மகிழ்ச்சியை தருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
பாபா நோன்யா சமூக சங்கத்தினர் நடத்தி வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தேசிய ஒற்றுமை துறை அமைச்சு முழுமையான ஆதரவை வழங்கும் என அவர் உறுதியளித்தார்.
பாபா நோன்யா சமூக சங்கம் தொடர்ந்து இது போன்ற நிகழ்ச்சிகளை கொண்டாட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
21 total views, 1 views today