பட்டர்வொர் ஆக 5-பினாங்கு மாநில இந்து இளைஞர் பேரவையின் 34வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய டாக்டர் ஆர். லிங்கேஸ்வரன், இளைஞர்கள் தங்கள் சார்ந்த அமைப்புகளில் அதிகமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம், நாட்டில் வலுவாக அமைய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பினாங்கு மாநில இந்து இளைஞர் பேரவையின் 34 வது பொதுக்கூட்டம் பட்டர்வொத்தில் அமைந்துள்ள இலக்கவியல் பொது நூலகத்தில் நடைபெற்றது.இன்றைய சூழ்நிலையில், இளைஞர் அமைப்புகளை வழிநடத்தும் இளைஞர்கள் எதிர்நோக்கி வரும் சவால்களை சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். மேலும், மாநில அரசுடன் இணைந்து மானியம் பெற்றுத் தருவதற்கான உதவிகள் வழங்கப்படும் என்றும், இளைஞர் அமைப்புகள் செயல் பரந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் சிறந்த சாதனைகளை அடையலாம் என்று குறிப்பிட்டார்.
பிரதமர் அன்வர் இப்ராகிம் நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு வருவதாகவும், ஆசிய நாடுகளில் மலேசியப் பொருளாதாரம் சிறந்த நிலையை அடைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பினாங்கு மாநிலப் பேரவையின் செயலாளர் திரு சரவண தேசிகன் பினாங்கு மாநில இந்து இளைஞர் பேரவையின் 33 ஆம் ஆண்டு பொதுக்கூட்டத்திற்கு வருகை அளித்த அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து வருகை புரிந்த சிறப்பு வருகையாளர்களுக்கும் பேராளர்களுக்கும் இயக்கத் தலைவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டதோடு இவ்வருடப் பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற உறுப்பினர்கள் அனைவரின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் வரவேற்புரையில் பினாங்கு மாநில இந்து இளைஞர் பேரவையின் செயலாளர் திரு சரவண தேசிகன் கேட்டுக் கொண்டார்.
வரும் ஜனவரி மாதம் 2026 இளைஞர்களின் வயது கட்டுப்பாடு 40 வயதிலிருந்து 30 வயதாக குறைக்கப்படுகிறது. தமது உரையில் அவர் நிறைய திட்டங்கள் வைத்திருக்கிறதாகவும் இளைஞர்களுக்கு பண உதவி இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் உதவியோடு பல வாய்ப்புகள் அடிமட்ட உறுப்பினர்கள் சேர வேண்டும் என்றும் தொடர்ந்து இவரோடு தேசிய இளைஞர் பேரவையின் ஆண்டு கூட்டம் இந்த பினாங்கு மாநிலத்தில் நடக்கும் என்றும் மாநில பேரவை முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தலைமை உரையில் மலேசியா இந்து இளைஞர் பேரவையின் தேசியத் தலைவர் சு.ஆனந்தன் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து, பினாங்கு மாநில இந்து இளைஞர் பேரவையின் இடைக்காலத் தலைவர் திரு யுவராஜ் அவர்கள் கூறுகையில் இந்த 33 ஆம் ஆண்டு பொதுக்கூட்டம் நடக்கையில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார். இவ்வேளையில் பினாங்கு மாநிலப் பேரவையின் செயற்குழு உறுப்பினர்களும் கிளைத்தலைவர்களுக்கும் கிளை பொறுப்பாளர்களுக்கும் நன்றிதனைத் தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து உறுப்பினர்களுக்கு பேரவையின் கொள்கையை கடைப்பிடிப்பதோடு சட்டவிதிகளை பின்பற்றுமாறு கூறினார்.
இந்த இளைஞர் பேரவையின் நட்பே காப்பாற்றுவதற்கும் ஒற்றுமையாக இருக்க எல்லா அடிப்படை உறுப்பினர்களும் ஒன்றிணைந்து முழு ஒத்தழைப்புடன் இந்த இயக்கத்தின் நட்பே காப்பாற்ற வேண்டும் என்று கூறினார். இவ்வேளையில் எல்லா இயக்கத் தலைவர்களுக்கும் முன்னாள் இயக்க தலைவர்களுக்கும் முன்னால் இயக்க உறுப்பினர்களுக்கும் இந்த ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெறுவதற்கு உழுது துணையாக இருந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இளைஞர் அமைப்புகளின் செயல் திட்டங்களின் வழி “பினாங்கு 2030” எனும் கோட்பாடினுடைய பினாங்கு மாநில வளர்ச்சியினை அடைய முடியும் என்பது திண்ணம் என்று கருத்துரைத்தார். இதுகாறும் நடைபெற்ற, இனி நடைபெறவுள்ள நிகழ்ச்சிகளின் வழி இளைஞர்கள் சிறந்த தலைமைத்துவ பண்புகளை விதைக்க முடியும் என்றும் இந்தத் தலைமைத்துவமானது அவர்களை தீய வழிக்கு இட்டுச் செல்லாது என்பதனையுக் பினாங்கு மாநில இளைஞர் மன்றங்களின் தலைவர் முகம்மது ஹாபிஸ் பின் அன்வார் நன்கு தெளிவுப்படுத்தினார்.
தமக்கு மாநில இந்த. இளைஞர் பேரவை தலைவராக இருந்து செயலாற்ற வாய்ப்பு கிடைத்தமைக்கு தமது நன்றியை தெரிவிப்பதாக மாநில இந்து இளைஞர்பேரவை தலைவரான கோமகன் லிங்கம் நன்றி தெரிவித்தார்.
2019 ஆண்டு மாநில இந்து இளைஞர் பேரவை தலைவராக பொருப்பு வகித்த தாம்,அக்காலம் கோவிட்19 தொற்று காலம் இதில் பலருக்கு மாநில பேரவை சார்பில் உதவிகளை வழங்கினோம் இதுமறக்க முடியாதது இதில் பங்கேற்ற அனைத்து இந்து இளைஞர் கிளைகளுக்கு அவர் தமது நன்றியை தெரிவித்திக்கொண்டார்.
இந்ந பினாங்கு மாநில இந்து இளைஞர் பேரவையின் 34 வது ஆண்டுப்பொதுக்கூட்டத்தில் சிறப்பு பிரமுகராக செனட்டர் ஆர்.லிங்கேஸ்வரன்,மலேசிய இந்து இளைஞர் பேரவையின் தேசிய தலைவர் ஆனந்தன் சுப்பிமணியம்,பினாங்கு மாநில இந்து இளைஞர் பேரவை தலைவர் கோமகன் லிங்கம்,இந்து இளைஞர் பேரவை ஆலோசகர்கள் டத்தோ மரியதாஸ் கோபால்,கெப்டன் ராம்,டத்தோ ஜேசன்,மாநில இந்து இளைஞர் பேரவையின் முன்னால் தலைவர்கள் ஜெயராமன்,ஆர்.ரமணி,பினாங்கு இளைஞர் மன்ற தலைவர் ஹாபிஸ்,பினாங்கு இந்து மாமன்ற தலைவர் தனபாலன், இந்து இளைஞர் இயக்க கிளை தலைவர்கள் மற்றும் அழைக்கப்பட்ட பிரமுகர்கள் கலந்து சிப்பித்தனர்.
24 total views, 1 views today