செப்பாங் ஜூலை 29-கோத்தா கினபாலுவிலிருந்து சீனாவின் குன்மின் நகருக்கு ஏர் ஆசியா நேரடி விமான சேவையை தொடங்குகிறது.

மலேசியாவில் தனது இரண்டாவது மிகப்பெரிய மையமான கோத்தா கினபாலுவிலிருந்து குன்மின் நகருக்கு எதிர்வரும் 25 செப்டம்பர் 2024 முதல் இந்த புதிய விமான சேவையை உலகின் தலைசிறந்த மலிவு கட்டண விமான நிறுவனமான ஏர் ஆசியா மேற்கொள்ள இருக்கிறது.
கோத்தா கினபாலுவிலிருந்து குன்மின் நகருக்கு வாரத்திற்கு 3 முறை இந்த நேரடி விமான சேவை மேற்கொள்ளப்படும்.

செப்டம்பர் 2024 முதல் கோத்தா கினபாலுவிருந்து சீனாவில் 10 நகரங்களுக்கு வாரத்திற்கு 69 விமான சேவையை ஏர் ஆசியா மேற்கொள்ளும்.
இந்த புதிய விமான சேவையை கொண்டாடும் வகையில் கோத்தா கினபாலு-குன்மின் விமான சேவைக்கு 20 விழுக்காடு கட்டண கழிவை ஏர் ஆசியா வழங்குகிறது.
இதன் வழி கோத்தா கினபாலுவிலிருந்து குன்மின் நகருக்கு அனைத்தும் அடங்கிய ஒரு வழி பயண கட்டணம் வெ 304 தான்.
இன்று முதல் 4 ஆகஸ்டு 2024-க்குள் AirAsia MOVE செயலியின் வழி இந்த சிறப்பு கட்டணத்திற்கான டிக்கெட்டுகளை பதிவு செய்து கொள்ளலாம்.சீனாவிற்குள் நுழையும் மலேசிய சுற்றுப்பயணிகள் 15 நாட்கள் இலவச விசாவிற்கு தகுதி பெறுவர்.
130 total views, 1 views today