English Tamil Malay

அல்மா கால்பந்து அணி சம்பியன் ஆனது.

ஆர்.ரமணி

பட்டர்வொர்த் மே 4-மறைந்த முன்னால் கால்பந்து விளையாட்டாளர்கள் ஆர்.சேகர் மற்றும் ஆர்.மணிவர்மன் சகோதரர்கள் நினைவாக நட்புமுறை கால்பந்து போட்டி அண்மையில் பட்டர்வொர்த் சென் மார்க் ஆரம்ப பள்ளி திடலில் சிறப்பாக நடைபெற்றது.

6 அணிகள் கலந்துகொண்ட இந்த கால்பந்துப் போட்டிதனை அல்மா கால்பந்து முன்னணி விளையாட்டாளர்கள் ச.புவனேஸ்வரன் மற்றும் செல்வம் ஆகியோர் முன்னின்று ஏற்பாடு செய்தனர்.

பினாங்கு கால்பந்துலகில் ஆர்.சேகர் மற்றும் ஆர்.மணிவர்மன் நன்கு அறிமுகமான கால்பந்து வீரர்கள்.

இந்த இரு சகோதரர்களும் பினாங்கு மாநிலத்தை பிரதிநிதித்து ராஜா ராஜா கால்பந்து கிண்ணம்,பிரசிடன் கால்பந்து கிண்ணம்,மலேசியக் கிண்ண கால்பந்து போட்டிதனில் நெகிரி மாநில என்.எஸ் சிம்பாக்கா அணி,பெர்லிஸ் மாநில கால்பந்து அணிகளில் விளையாடிச் சிறந்த கால்பந்து விளையாட்டாளர்களாக வலம் வந்தவர்கள் என புவனேஸ்வரன் நினைவு கூர்ந்தார்.

வளர்ந்து வரும் இந்தியக் கால்பந்து விளையாட்டாளர்களுக்கு முன்மாதிரி விளையாட்டாளர்களாக இருந்த ஆர்.சேகர் மற்றும் ஆர்.மணிவர்மன் ஆரம்பத்தில் ஜூரு யாங்ஸ்டார் கால்பந்து குழுவில் விளையாடியதுடன் பிறகு பினாங்கு மாநிலத்தில் தலை சிறந்த கால்பந்து குழுக்களான பிங்கோ,பிறை இந்தியன்,பட்டர்வொர் ரேஞ்சஸ் போன்ற சிறந்த கால்பந்து அணிகளுக்கு விளையாடி வெற்றி கொடிய நாட்டியவர்கள்.

கால்பந்து அணிகளுக்குச் சிம்ம சொப்பனமாக இருக்கும் இவ்விரு சகோதரர்கள் கோல் மன்னர்களாக இருந்து பல பிரபல கால்பந்து அணிகளின் வெற்றிக்கு பங்காற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்து.

ஜூரு தோட்ட மண்ணின் மைந்தர்களாக இருக்கும் இவர்களின் தந்தையார் இராமையா மாரிமுத்து 60களில் சிறந்த கால்பந்து வீரராக இருந்து அப்போது பிரபல முன்னணி கால்பந்து அணிகளாகத் திகழ்ந்த பிறை இந்தியன்,பட்டர்வொர்த் கால்பந்து அணிகளில் விளையாடியுள்ளதுடன்,பினாங்கு மாநில முன்னணி கால்பந்து விளையாட்டாளரும்,பயிற்சியாளருமான சுக்கோர் சாலே போன்றோரிடம் ஒன்றாகக் கால்பந்து விளையாடியுள்ளார்.

ஆரம்பத்தில் ஜூரு யாங்ஸ்டர் கால்பந்து குழுவின் நிர்வாகி மறைந்த ஆறுமுகம் @ மாயா,இராஜேந்திரன் ஆகியோரின் முயற்சியில் இதர மாவட்டங்களில் இவ்விரு சகோதரர்களுக்கு வாய்ப்புகளைப் பிற கால்பந்து போட்டிகளில் விளையாட வாய்ப்புகளை வழங்கியவர்கள் குறிப்பிடத்தக்கது.

பினாங்கு மாநிலம் மற்றும் தேசிய நிலையிலான கால்பந்து போட்டிகளில் விளையாடி பெருமை சேர்த்தவர்கள் இவ்விரு சகோதரர்கள் என அல்மா கால்பந்து அணியின் கால்பந்து விளையாட்டாளருமான செல்வம் கூறினார்.

நட்புமுறை மற்றும் மறைந்த கால்பந்து விளையாட்டளார்கள் ஆர்.சேகர் மற்றும் ஆர்.மணிவர்மன் குடும்பத்தினருக்கு உதவி நிதியிம் வழங்கபட்டது.

ஆர்.சேகர் ஆர்.மணிவர்மனின் நினைவாக நடத்தப்பட்ட கால்பந்து போட்டியில் அல்மா கால்பந்து அணி சம்பியன் கிண்ணத்தை வெற்றிகொண்டதுடன் இரண்டாம் நிலை வெற்றியாளராக எஸ்பிடி கால்பந்து வெற்றிகொண்டது.

மறைந்த கால்பந்து விளையாட்டாளர்கள் ஆர்.சேகர் மற்றும் ஆர்.மணிவர்மன் ஆகியோருக்கு கல்லறை ஒன்றை எழுப்ப நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளதுடன்,அவர்களின் குடும்பத்தினருக்குப் பண உதவி அந்நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 281 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *