English Tamil Malay

ஆர்.தசரதன்

கப்பளா பத்தாஸ் மே 1-செபராங் பிறை,வடக்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கப்பளா பத்தாஸ் மகா மாரியம்மன் ஆலய ஏற்பாட்டில் ஆலய வளாகத்தைத் துப்புரவு பணி நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற்றது.

செபராங் பிறை வடக்கு மாவட்ட போதைப்பொருள் மறுவாழ்வு மையம் மற்றும் பினாங்கு இந்து சங்க பேரவை இந்நிகழ்ச்சிக்கு இணை ஆதரவை வழங்கின.

கப்பளா பத்தாஸ் மகா மாரியம்மன் ஆலய தலைவர் கோ.விஜயன்,க.பாண்டியன்,செபராங் பிறை வடக்கு மாவட்ட போதைப்பொருள் மறுவாழ்வு அதிகாரி அனிதா இராமன் மற்றும் ஆலய நிர்வாக்குழுவினர் இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர்.

போதைப்பொருள் உட்கொண்டு பிறகு பல ஆண்டுகலாகமாக மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு தங்களின் வாழ்கையைத் தொடங்க உள்ளவர்களுக்கு ஆறுதல் கூறும் வகையில், மன வலிமையுடன் வாழ்க்கை பாதைக்கு மீண்டும் திரும்புபவர்கள் பழைய சம்பவங்களை மறத்து வாழ்ந்தால் வாழ்வில் மாற்றம் கானலாம் எனச் சிறப்புரை ஆற்றுகையில் பினாங்கு மாநில இந்து சங்க பேரவைத் தலைவர் மா.முனியாண்டி அறிவுறுத்தினார்.

மன வலிமை,இறை நம்பிக்கை ஆகியவை முக்கியமானது என்றும்,செய்த தவற்றை மீண்டும் செய்யாமல் தங்களின் வாழ்வை மாற்றி தூய சிந்தனையுடன் செயல்பட்டால் புதிய மறுதலை பெற முடியும் எனவும் மா.மு.முனியாண்டி மேலும் கூறினார்.

 90 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *