English Tamil Malay


ஆர்.தசரதன்

பினாங்கு ஏப் 30-பினாங்கு மாநில முதன்மை சமூக நல இயக்கத்தின் ஆதரவில் கணினி வடிவமைப்பு துறையில் டிப்லோமா பயிலும் கல்லூரி மாணவன் கே.இரவீந்திரனுக்கு மடிக் கணினி மற்றும் நிதி உதவி வழங்கி ஆதரவு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிதி உதவிதனை பினாங்கு மாநில முதன்மை சமூக நல இயக்கத்தின் தலைவர் அழகேசன் ஐயாரு சார்பில் இயக்கத்தின் ஆலோசகர் டத்தோ மு.இராமசந்திரன் எடுத்து வழங்கினார்.
இந்த உதவி நிதி மற்றும் மடிக் கணினி வழங்கும் நிகழ்ச்சியில் உடன் பினாங்கு மாநில முதன்மை சமூக நல இயக்கத்தின் தலைவர் ஐ.அழகேசன்,செயலாளர் இயாம் சிவ் ந,பினாங்கு மாநில இந்து தர்ம மாமன்ற ஆலோசகர் அன்பே ஆனந்தம்,முனைவர் ஆர்.குணசேகரன் பிள்ளை மற்றும் இதர தலைவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

 52 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *