புத்ரா ஜெயா ஜூன் 12-தேசிய ஒற்றுமை துறை அமைச்சின் 2023 ஆண்டு சிறந்த சேவையாளருக்கான பாராட்டு விருது மற்றும் 2024 ஓய்வு பெறும் ஊழியர்களை பாராட்டும் விருது நிகழ்ச்சி புத்ரா ஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் நடைபெற்றது.
இந்த பாராட்டு நிகழ்ச்சிக்கு தேசிய ஒற்றுமைத்துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி தலைமையேற்றார்.
சிறந்த சேவையாளருக்கான விருதுகளை பெற்ற தமது அமைச்சின் ஊழியர்களை அவர் வெகுவாக பாராட்டினார்.
அரசாங்க ஊழியர்கள் தங்களின் கடமைகளில் கண்ணும் கருத்துமாக செயல்பட வேண்டும் என அவர் ஆலோசனை கூறினார்.
அரசுத்துறை ஊழியர்கள் தங்களின் கடமைகளிலிருந்து தவறி விடக்கூடாது என்றார் அவர்.
அதே வேளையில் ஓய்வு பெறும் ஊழியர்களின் சேவைகளை தேசிய ஒற்றுமையைத் துறை அமைச்சு ஒருபோதும் மறந்து விடாது என அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் தேசிய ஒற்றுமை துறை அமைச்சர் தலைமைச் செயலாளர் டத்தோ அஸ்மான் முகமட் யூசுப், அமைச்சின் உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த பாராட்டு நிகழ்ச்சியில் சிறந்த சேவைக்கான விருது பெற்றவர்களுக்கு செனட்டர் சரஸ்வதி உறுதிகளை எடுத்து வழங்கினார்.
33 total views, 2 views today