கோலாலம்பூர் ஜூன் 8
சட்டத்துறை தலைவர் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞரின் அதிகாரங்களை பிரித்தல் குறித்து மலேசிய பேராளர் குழுவினர் ஆஸ்திரேலியா, கான்பேராவில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேராளர் குழுவிற்கு பிரதமர் இலாகா (சட்டம் மற்றும் நீதி சார் சீர்திருத்தம்) அமைச்சர் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் தலைமையேற்றார்.
இந்த பேச்சு வார்த்தையில் அமைச்சின் துணையமைச்சர் எம். குலசேகரன், மனித உரிமை மீதான நாடாளுமன்ற தேர்வு குழு தலைவர் வில்லியம் லியோங் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அவாங் ஹாஷிம் ஆகியோர் கலந்து கொண்டதாக அஸாலினா கூறினார்.
மேலும் இந்த பேச்சுவார்த்தையில் பிரதமர் இலக்கா சட்டப் பிரிவு அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மன்ற தலைவர் ஆகியோர் இடம்பெற்றதாக அவர் தெரிவித்தார்.
மலேசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் சட்டத்துறை தலைவர் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞரின் பங்குகள் குறித்து விரிவாக பேசப்பட்டதாக அவர் சொன்னார்.
ஆஸ்திரேலியாவில் கடைப்பிடித்து வரும் நடைமுறை குறித்து ஆஸ்திரேலிய சட்டத்துறை தலைவர் மார்க டிரேபஸ் விரிவாக விளக்கம் தந்ததாக அவர் சொன்னார்.
இந்த பேச்சுவார்த்தையில் மலேசிய பேராளர்கள் துறை சார் சீர்திருத்தம் குறித்து பல கலந்துரையாடல்களில் பங்கு பெற்றதாக அவர் தெரிவித்தார்.
மொனாஸ் பல்கலைக்கழகத்தின் சட்டப்பிரிவு தலைவர் மெரிலின் பிட்டார்ட் தலைமையில் நடந்த இந்த கலந்துரையாடல்களில் இரு நாடுகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட சற்று நிபுணர்கள் கலந்து கொண்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த சந்திப்பில் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற கட்டிடத்தில் அந்நாட்டு தொடர்பு துறை அமைச்சர் மிஷேல் ரோவ்லன்ட் மற்றும் வெளியுறவு துணையமைச்சர் திம் வாட்ஸ் ஆகியோடுன் பேச்சு வார்த்தை நடத்தியதாக அஸாலினா தெரிவித்தார்.
26 total views, 1 views today