English Tamil Malay

ஆர்.தசரதன்

மக்களின் கல்வி கலஞ்சியமாக நூலகம் திகழம்.

ஆச்சிக்குழு உறுப்பினர் சொங் எங்


புக்கிட் மெர்தாஜம்
ஏப் 28-செபராங் பிறை,மத்திய மாவட்டத்தில் அமைந்துள்ள டேசா வாவசான் குடியிருப்பு பகுதியில்  மாணவர்கள் மற்றும் பொது மக்களின் நன்மைக்காக நூலகம் ஒன்றை பினாங்கு மாநில பெண்கள் சமூக நல மேம்பாட்டு மற்றும் இஸ்லாம் அல்லாதவர் ஆட்சிக்குழு உறுப்பினர் சொங் எங் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.

இந்த நூலக திறப்பு விழாவிற்கு பட்டர்வொர்த் இன்னர் வீல் கிளாப்,எம்பிகே டிஎஸ்ஆர் 1, மற்றும் பாடாங் லாலாங் சட்டமன்ற அலுவலகம் நல்லா தரவு வழங்கியது.

இந்நிகழ்ச்சியில் இன்னர் வீல் கிளாப் தலைவர் டேய்சி ராணி வேலுப்பிள்ளை,இயக்குநர் லூசி பார்ரோக்,டாக்டர் சுஜாதா,நிர்வாக உறுப்பினர்கள் ஜெசிக்கா கண்ணன்,சூரியா மங்கலம் மற்றும் நரின் காவூர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

டேசா வாவசான் குடியிருப்பு பகுதியில் உள்ள பி40 வருமானம் குறையுடைய குடும்பத்தினரின் பிள்ளைகள் கல்வி நலனுக்கும்,வாசிப்பு பழக்கத்தினால்  பெறும் அறிவின் நன்மைக்காக  இந்த நூலகம் திறக்கப்பட்டதாக பாடாங் லாலாங் சட்டமன்ற உறுப்பினரான சொங் எங் தெரிவித்தார்.

நூலகம் திறக்கப்பட்டதன் வாயிலாகப் பல்லின் மக்கள் பலனடைவார்கள் என்பதுடன் சமூக முன்னேற்றத்தில் கல்வி அறிவு மேம்படும் என சொங் எங் நம்பிக்கை தெரிவித்தார்.

டேசா வாவசான் குடியிருப்பாளரான புவான்  சாரா யாஹாயா நூலகத்தின் நிர்வாக தொன்டூழியராக நியமனம் செய்யப்பட்டார் என்பதுடன் நூலக திறப்பு விழாவுக்கு ஒத்துழைப்பு வழங்கிய டிஎஸ்ஆர் 1 குடியிருப்பு மேம்பாட்டு சமூக நிர்வாக தலைவர் யோகன் ராஜ்,நிநேகம் மலேசியா தலைவர் டத்தோ,முனைவர் புலோரன்ஸ் சின்னையா மற்றும் டேசா வாவசான்னய குடியிருப்பாளர் சங்கத்தினர் பொது மக்களுக்கு  சொங் எங் நன்றி கூறினார்.

இந்த நூலகத்தில் 550  கதைப் புத்தகங்கள் நாவல்கள்,பொது அறிவு  புத்தகங்கள் இருப்பதுடன்,நூலகத்தில் உள்ள புத்தகங்கள் அனைத்தும் தொன்டூழியர்களால்நன்கொடையாக வழங்கியவை என்றும் தெரிவிக்கப்பட்டது.

 36 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *