ஆச்சிக்குழு உறுப்பினர் சுந்தராஜூ தொடக்கி வைத்தார்.
பத்து கவான்மே 28-பத்து கவான் தொழில்பேட்டை பகுதியில் அமைந்துள்ள எம்.எம் சென்சுவரி நிறுவனத்தின் ஏற்பாட்டில் பூமி தினம்,சுற்றுச்சூழல் தினம் தொழிலாளர் பாதுகாப்பு தின கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு எம்.எம் சென்சுவரி நிறுவனத்தின் இயக்குநர்கள் அசோக் குமார் ரங்கையா மற்றும் விஷ்வம் ரங்கையா தலைமையேற்றனர்.
எம்.எம் சென்சுவரி நிறுவனம் பூமி தினம்,சுற்றுச்சூழல் தினம் தொழிலாளர் பாதுகாப்பு தினம் ஆகியவற்றைக் கொண்டாடுவதில் மகிழ்ச்சி கொள்கிறது.
நாம் வாழ்கின்ற பூமியை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை,இதற்காக எம்.எம் சென்சுவரி நிறுவனம் தனது தொழிலாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும்,தொழிலாளர் மத்தில் பாதுகாப்பாக பணியிடத்தில் வேலை செய்வதன் மூலமாகப் பாதுகாப்பு அம்சங்களைக் கடைப்பிடிக்கவும் தமது சிறப்புரையில் எம்.எம் நிறுவனத்தின் இயக்குநர் அசோக் குமார் ரங்கையா தெரிவித்தார்.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் அதிகமான விழிப்புணர்ச்சி தேவை அதற்கு ஒவ்வொருவரின் பங்களிப்பு அவசியமானதாகும்,அதற்கு இளையோர் மத்தியில் விழப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாகத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அழைக்கப்பட்டு அவர்களுக்குச் சுற்றுச்சூழல் தொடர்பான பாதுகாப்பு குறித்தும் அவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இதனுடன் சுற்றுச்சூழுக்கு மிகப் பெரிய மிரட்டலை நெகிழி பொருட்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது அதன் தொடர்பாக நெகிழி பயன்பாட்டைக் குறைப்பதில் தங்களின் நிறுவனம் போதிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அசோக் குமார் விவரித்தார்.
உலக சுகாதார மையம் நெகிழி பொருட்களினால் உலகில் சுற்றுச்சூழல் பாதிப்பு அடைந்துள்ளதாகவும்,மக்களின் சுகாதாரம் பாதிப்படைந்து வருவதைத் தெரிவித்ததுடன் நெகிழி பொருளை உலகில் 60% குறைக்க வேண்டுமெனும் இலக்கு வகுத்திருப்பதால் அதற்கு எம்.எம்.சென்சுவரி நிறுவனம் போதிய நடவடிக்கை எடுக்குமென அவர் மேலும் தெரிவித்தார்.
தனது நிறுவனத்தின் ஏற்பாட்டில் முதல் பூமி தினம் கொண்டாடப்பட்டது அதற்காகப் பூமி தினத்தைக் கொண்டாட முடிவு எடுக்கப்படு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நொக்கம்முடையது என்றும் இதற்கு ஆதரவளித்த பினாங்கு வீடமைப்பு சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ சுந்தராஜூ,பெர்கேசோ மற்றும் இதர அரசு நிறுவனங்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் சிறப்பாகச் செயல்படும் மறுசூழ்ச்சி நிறுவனமான எம்.எம்.சென்சுவரி நிறுவனத்தின் செயல்பாடுகளைப் பாராட்டுவதாக இந்நிகழ்ச்சியில் சிறப்புப் பிரமுகர்களாகக் கலந்துகொண்ட டத்தோ ஶ்ரீ சுந்தராஜூ சோமு தெரிவித்தார்.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் மாநில அரசாங்கம் ஊக்குவித்து வருகிறது.அதில் பினாங்கு ஆளுநர் துன் டத்தோ ஶ்ரீ உத்தாமா புஸி அப்துல் இரசாக் அவர்கள் பினாங்கெ கொடி மலையில் தொடங்கி 1.2 மில்லியன் மரம் நடும் திட்டத்தின் வாயிலாகத் தொடங்கப்பட்டது அதனைத் தொடர்ந்து பிறை சட்டமன்றத் தொகுதியில் 150,000 மரங்களை நடும் திட்டம் தொடங்கப்பட்டது என்றார் அவர்.
பினாங்கு மேயர் டத்தோ இராஜேந்திரன் அவர்களின் ஆதரவுடனும்,செபராங் பிறை மாநகர் கழகம் மற்றும் அரசு இலாக்காவின் உதவியுடன் 1.2 மில்லியன் மரங்களை நட ஒத்துழைப்பு நல்கப்படுமென டத்தோ ஶ்ரீ சுந்தராஜூ நம்பிக்கை தெரிவித்தார்.
எம்.எம் சென்சுவரி நிறுவனம் ஒரு இந்திய நிறுவனமாக இருந்து சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக மறுசூழ்ச்சி வாயிலாகச் சிறந்த பங்களிப்பை வழங்கியிருப்பது பாராட்டுக்குரியது என அவர்ரய புகழாரம் சூட்டினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு வருகையாளராக பினாங்கு வீடமைப்பு சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஶ்ரீ சுந்தராஜூவுடன்,பினாங்கு சுற்றுச்சுழல் இலாக்கா அதிகாரி சூல் இதர அரசு அதிகாரிகள் உடன் எம்.எம் சென்சுவரி நிறுவன இயக்குநர்கள் அசோக் குமார் ரங்கையா மற்றும் விஷ்வம் ரங்கைய, நிறுவன உயர் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து சிறப்பித்தனர்.
54 total views, 1 views today
It is truly great to see some companies take the initiative to create eco-awareness among young children and society at large. MM Century has demonstrated a commendable commitment to environmental education and sustainability. Their efforts to organize and promote events focused on eco-awareness are not only inspiring but also vital in fostering.