English Tamil Malay

பெனாந்தி ஏப் 16-செபராங் பிறை,மத்திய மாவட்டம், பினாந்தி,அரா கூடா  ஶ்ரீ மகா முத்து மாரியம்மன் ஆலயத்தின. தீமிதி திருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.


கடந்த 5.4.2024 தொடக்கம் 13.4.2024 ஆம் நாள்  முதல் ஆலய தீமிதி திருவிழாவை முன்னிட்டு சிறப்பு உபயங்கள் நடத்தப்பட்டதாக ஶ்ரீ மகா முத்து மாரியம்மன் ஆலயத்தின் ஒருங்கினைப்பாளர் பாலன் நம்பியார் தெரிவித்தார்.


நூற்றாண்டு பழமை வாய்ந்த பினாந்தி தோட்ட ஶ்ரீ மகா முத்து மாரியம்மன் ஆலயம் 1886 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது என்பதுடன்,பினாங்கு மாநிலத்தில் உலக பாரம்பரிய பண்பாட்டு ஆலய தற வரைசையில் இடம்பெற இந்த ஆலயம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என பாலன் நம்பியார் மேலும் கூறினார்.


ஆலய தீமிதி திருவிழாவை முன்னிட்டு நேற்று மதியம் 12.15 தொடக்கம் பூக்குழி திறப்ப வைபவம் இடம் பெற்றத்தில் ஏராளமான சுற்று வட்டார பொது மக்களும்  பக்த பெருமக்களும திரளாக கலந்து சிறப்பித்தனர்.


ஆலயத்தில் பது வரவாக ஆலயத்துகாக சொந்த ரதம் ரிம 1 லச்சம் செலவிலும்,ஆலயத்தின் முன்புறத்தில் இராஜ கோபுரம் நிர்மாணிக்கபட்டுள்ளது என்பதுடன்,இப்பகுதியில் உள்ள ஜடா முனீஸ்வரர்  மற்றும் ஶ்ரீ மகா முத்து மாரியம்மன் ஆலயங்களை தங்களின் பாதுகாப்பில் வைத்து பராமரிப்பு செய்யப்பட்டு வருவதாக பாலன் நம்பியார் மேலும் தெரிவித்தார்.


இதனிடையே தீமிதி திருவிழாவை முன்னிட்டு ஆலயத்தில் நடந்த சிறப்பு மதிய  பூஜையில் பினாங்கு வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆச்சிக் குழு உறுப்பினர் டத்தோ ஶ்ரீ சுந்தராஜூ சோமு,பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன்,பாடாங் லாலாங் சட்டமன்ற உறுப்பினரும்,விளையாட்டு,சுகாதார ஆச்சிக்குழு உறுப்பினருமான டேனியல் கோய்,ஆலய காப்பாளரும் பத்து ஊபான் சட்டமன்ற உறுப்பினரான எஸ்.குமரேசன், பினாங்கு இந்திய விவகாரங்களுக்கான சிறப்பு அதிகாரி டத்தோ மு.இராமசந்திரன் ஆகியோர் சிறப்பு பிரமுகர்களாக கலந்துக்கொண்டனர்.


ஆலய திருவிழாவில் உடன் ஆலயதலைவர் தனராஜ் சுப்பிரமணியம் துணை தலைவர் குணரத்தினம் செய்லாளர் தி.காளிமுத்து ஆகியோருடன் சுற்றுவட்டார பொது மக்கள் மற்றும் பக்த பெருமக்கள் ஆலய தீமிதி திருவிழாவில் பெரும் திரளாக கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடதக்கது.

திருவிழா அன்று உயர்எ திரு என்.டி.எஸ் அறுமுகம் புள்ளை அவர்களின் புதல்வர்  புஸ்பராஜன் பிள்ளை அவர்கள்  பொருப்பேற்று நடத்தினார்.ஆலய திருவிழாவை சிவ ஶ்ரீ   அறிவழகன் குருக்கள் தலைமையில் நடத்தப்பட்டதுடன் அவருக்கு உதவியான 7 உதவி குருக்கள் பணியாற்றினர்.

ஆலய திருவிழா சிறப்பாக அமைய நாதஸ்வர இசைதனை சக்தி சகோதர்கள் சிறப்பாக நாதஸ்வர இசை வழங்கி மேலும் மெருகேற்றினர்.

 57 total views,  1 views today

One thought on “பெனாந்தி ஶ்ரீ மகா முத்து மாரியம்மன் ஆலய திருவிழா”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *