English Tamil Malay

(சத்யா பிரான்சிஸ்)

ஷா ஆலாம். ஏப்ரல் 15-நேற்று தொடங்கிய அனைத்துலகை அம்பேத்கர் மாநாட்டில் பிரதமர் அன்வாருக்கு “அனைத்துலக அம்பேத்கர் விருது” ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த அரங்கத்தில் வழங்கப்பட்டது.

அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 133ஆவது பிறந்தநாள் விழாவும் அனைத்துலக மாநாடும் இன்று கோலாகலமாக ஷா ஆலம் ஐ டி சி சி மாநாட்டு மண்டபத்தில் மாலை 4 மணிக்கு ஆரம்பமானது.

மாநாட்டில் துவக்கத்தில் ஸ்ரீ ரங்கநாதர் பரதாலயம் நடனக்குழுவினர் முஹிபா கதம்ப நடனத்தை வழங்கினர். இதை அடுத்து மாநாட்டு ஏற்பாட்டுக் குழு தலைவர் டத்தோ கே. பஞ்சபூர்த்தி வரவேற்புரை ஆற்றினார். அதன்பின் மாநாட்டில் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு “அனைத்துலக அம்பேத்கர் விருது” வழங்கப்பட்டது.

வறிய நிலையில் இருக்கும் மக்களுக்காகவும் அவர்களின் துன்பங்களைக் களைவதற்கும் அவருடைய பிரச்சினைகளை எடுத்துக் கூறுவதற்கும் நாங்கள் ஒரு ஊடகத்தை நடத்தினோம். அதன்படி அவர்களுடைய குரலை நாட்டில் ஒலிக்க செய்தோம் என்றார் மாநாட்டின் செயலாளரும் துணை அமைச்சருமான சரஸ்வதி கந்தசாமி.

பெண்கள் சமூக வாழ்க்கையில் மட்டுமல்ல, அரசியலில் பணியாற்ற முன்வர வேண்டும். அவர்களுக்கான தலைமைத்துவ வாய்ப்பை தர வேண்டும் என்று கூறியவர் டாக்டர் அம்பேத்கர். நாட்டில் எதிர்கால தலைமுறைக்கான தலைவர்களை உருவாக்குவதில் அம்பேத்கர் இயக்கம் பாடுபடுகிறது.

உலகம் சமநிலை பெற வேண்டும் உயர்வு தாழ்ந்த நிலை அகற்றப்பட வேண்டும் வேண்டும். இது நிறைவு பெறுகின்ற மனம் வேண்டும். இறைவா அதை நீ தரவேண்டும் என்பது அகத்தியரின் பாடலாக இருந்தாலும் அம்பேத்கரின் வரிகள் பெண்களை முதன்மைப்படுத்துவதன் வழியாக ஒரு சமுதாய மறுமலர்ச்சி பெற வேண்டும் என்ற வேட்கையைத் தூண்டுகிறது என தமதுரையில் கூறினார் சரஸ்வதி கந்தசாமி.

இந்தியாவின் மாபெரும் தலைவர் அம்பேத்கர். பிற்பட்ட தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் பிறந்த அவர் உயர்கல்வி கற்று இந்திய நாட்டின் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக புதிய சட்ட திட்டங்களை வரையறுத்தார். இந்திய அரசியலமைப்பு சட்டத்திலும் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார்.

இது போன்ற சீர்திருத்தங்களை மலேசியாவிலும் கொண்டு வருவதற்கு முயற்சி செய்து வருகின்றேன். இங்கு எல்லா இனத்தாரும் மலேசியர்கள் தான். இங்கு எந்த இனத்தவரும் ஒதுக்கப்படக்கூடாது என்பதில் எனது மடானி அரசாங்கம் மிகக் கவனமாக செயல்படுகிறது என தமது உரையில் கூறினார் டத்தோஸ்ரீ அன்வார்.

இந்தியாவில் இருந்து வருகை தந்த பேராளர்கள் டத்தோ ஸ்ரீ அன்வாருக்கு பொன்னாடை மலர் மாலை அணிவித்து சிறப்பு செய்தார்கள். அதன் பின்னர் அனைவரும் அதிகாரப்பூர்வமான ஹரிராயா சிறப்பு விருந்தில் பங்கு கொண்டனர்.

 15 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *