English Tamil Malay

ஆர்.தசரதன்

பினாங்கு ஏப் 25-பினாங்கு மாநில் கலைச் சிற்பிகள் நலச் சங்கத்தின் கலைஞர் ஒன்று கூடும் நிகழ்ச்சி பினாங்கு இந்து அறப்பணி வாரிய மண்டபத்தில் சிறப்புடன் நடைப்பெற்றது.

சங்கத்தின் தலைவர் ஜிவராஜன் அவர்களின் தலைமையில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட திறப்பு விழாவில் சங்கத்தில் உறுப்பியம் பெற்ற கலைஞர்கள் திரளாக கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு பிரமுகர்களாக பினாங்கு இந்து அறப்பணி வாரிய நிர்வாக இயக்குனர் டத்தோ மு.இராமசந்திரன்,அன்பே ஆனந்தம் முனைவர் ஆர்.குணசேகரன் பிள்ளை,டத்தோ கலைச்செல்வன் மற்றும் மலேசிய இந்து தர்ம மாமன்றம்,பினாங்கு அருள் நிலைய தலைவர் என்.எஸ்.தனபாலன் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ மு.இராமசந்திரன் தமதுரையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள பினாங்கு மாநில கலைச் சிற்பிகள் நலச் சங்கத்திற்கு வாழ்த்தினை தெரிவித்துக்கொண்டார்.

பினாங்கு கலைஞர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.இந்து அறப்பணி வாரிய மண்டபங்களை கலைஞர்கள் பயன்படுத்திக்கொள்ளவும் அவர் அழைப்பு விடுத்தார்.

 58 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *