English Tamil Malay

கோலாலம்பூர் மார்ச் 24
அண்மையில் சின் சிவ் ஏற்பாடு செய்த 10 சிறந்த வர்த்தக நிறுவனங்களுக்கான விருது பட்டியலில் பிரபல வீடமைப்பு மேம்பாட்டு நிறுவனமும் சொத்துடைமை நிறுவனமான JL99 குழும நிறுவனம் இடம் பெற்றது.

இந்த உயரிய விருது தமக்கும் தமது குழும நிறுவன பணியாளர்களுக்கும் கிடைக்கப்பெற்ற ஒரு சிறந்த அங்கீகாரம் என அந்த நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை செயல்முறை அதிகாரியுமான டத்தோ பிகே ஜெப் லீ கூறினார்.
இதர பிரபல நிறுவனங்களுடன் JL99 இடம்பெற்றுள்ளது பெருமைக்குரிய ஒரு விஷயம் என அவர் குறிப்பிட்டார்.

10 சிறந்த வர்த்தக நிறுவனங்கள் பட்டியலில் JL99 பெயர் இடம் பெற்றுள்ளது எங்கள் நிறுவனத்திற்கு கிடைத்த ஒரு கௌரவம் என்றார் அவர்.
வர்த்தகத் துறையில் இன்னும் பீடு நடை போட இந்த விருது எங்களுக்கு மேலும் உற்சாகத்தை தந்துள்ளது.
‘அதேவேளையில் இந்த விருது நிகழ்ச்சியில் சிறந்த சொத்துடைமை நிறுவன விருது எனது மகள் அமான்டாவுக்கு கிடைக்கப்பெற்றது கண்டு நான் மனம் நெகிழ்ந்து போனேன்’ என அவர் தெரிவித்தார்.

எங்கள் நிறுவனத்திற்கு இந்த விழாவில் இரண்டு விருதுகள் கிடைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது என அவர் சொன்னார் .
இதுபோன்ற அங்கீகாரம் எளிதில் கிடைத்து விடாது. பல ஆண்டுகால கடினமான உழைப்புதான் இந்த அங்கீகாரம்.
வர்த்தக நிறுவனங்கள் லாபத்தை மட்டும் கருத்தில் கொள்ளக்கூடாது. மக்களுக்கும் நன்மைகளை செய்ய வேண்டும் என அவர் ஆலோசனை கூறினார்.

தற்போது விற்பனை சந்தையில் இருந்து வரும் 99 Legend(பிரிவு 2) வீடமைப்பு திட்டத்தின் வெற்றி தான் இந்த விருதுக்கு வித்திட்டதாக அவர் சுட்டிக் காட்டினார்.
தரமான உழைப்பு மற்றும் வாடிக்கையாளர்கள் திருப்தி வெற்றிக்கு மிக அவசியம் என அவர் தெரிவித்தார்.

 279 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *