English Tamil Malay

புத்ரா ஜெயா மார்ச் 18-அரசாங்க குத்தகைத் திட்டங்களைப் பெற்றிருக்கும் குத்தகையாளர்கள், அதற்காக அமைச்சர்களுக்கு முகஸ்துதி பாட வேண்டிய அவசியமில்லை எனப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.


அதற்குப் பதிலாக தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் குத்தகைகளை நல்ல முறையில் நடத்தி முடிப்பது மீது கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என அவர் சொன்னார்.

அத்தகைய சூழலில், அதாவது குத்தகைத் திட்டங்கள் கிடைத்த பின்னர், குத்தகையாளர்கள்’சம்பந்தப்பட்ட அமைச்சரை’தெரிந்து கொள்ள வேண்டியதில்லை என அவர் குறிப்பிட்டார்.

நேற்று முன்தினம் ரயில்வே எஸட் கார்ப்ரேஷன் மற்றும் எஸ்எம்எச் ரயில் நிறுவனத்திற்கும் இடையில் நடந்த குத்தகை வழங்குதல் நிகழ்ச்சியில் உரையாற்றும் போது அந்தோனி லோக் தெரிவித்தார்.

‘நடப்பு அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், சம்பந்தப்பட்ட அமைச்சரே தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. உங்களின் வேலையை எப்படிச் செய்து முடிப்பது என்பதைத்தான் நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதில் மிக முக்கியமானது உங்களின் வேலையைச் சிறப்பாகச் செய்யுங்கள்’ ஏன் அவர் குறிப்பிட்டார்.

அந்நிகழ்ச்சியில் தாம் ஆற்றிய உரையடங்கிய ஒரு காணொளியை தமது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்து கொண்ட லோக், இந்த நிகழ்ச்சிக்கு முன்னர், எஸ்எம்எச் நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ பிகே நாரா தான் என்பது தமக்குத் தெரியாது என்பதை ஒப்புக்கொண்டார்.

ரயில் இயந்திரங்கள், சக்கரங்கள், ரயில் பெட்டிகள் ஆகியவற்றைத் தயாரிப்பதுடன் பராமரிப்பு, பழுது பார்த்தல் ஆகிய சேவைகளை வழங்கும் ஒரே மலேசிய நிறுவனம்தான் இந்த எஸ்எஸ்எல்சி ரயில் நிறுவனம் ஆகும்.

உடன்பாட்டில் குறிப்பிட்டிருப்பது போல், எஸ்எம்எச் நிறுவனம் தனது சேவை நிறைவாகச் செய்யும் எனத் தாம் எதிர்பார்ப்பதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

மேலும் அந்த நிறுவனத்தின் செயல்பாட்டை தமது அமைச்சு கண்காணித்து வரும் என அவர் தெரிவித்தார்.

 33 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *