யோகிஷா,ரிஷாலினி தங்கப் பதக்கம் பெற்றனர்
ஈப்போ பிப் 17- அண்மையில் நடைபெற்ற பேராக் மாநில பள்ளிகளுக்கு இடையிலான கராத்தே போட்டியில் ஆர்டிஜி பயிற்சி நிறைந்த யோகிஷா தனபாலன் மற்றும் ரிஷாலினி குமார் தங்கப் பதக்கங்களை வென்று பெருமை சேர்த்தனர்.
இந்த போட்டியில் யோகிஷா இளையவர் பிரிவில் 1 தங்கம் மற்றும் 1 வெள்ளிப் பதக்கங்களை வென்றார். ரிஷாலினி குமார் காத்தா மற்றும் குமித்தே பிரிவில் 2 தங்கப் பதக்கங்களை வென்றார்.
அதேபோல் இந்த போட்டியில் சீனியர் பிரிவில் தேவசேனா ஈஸ்வரன் சீனியர் பிரிவில் 1 வெள்ளிப் பதக்கத்தை வென்றதாக ஒக்கினாவா ப்ரிஸ்டாயில் கராத்தே சங்கத்தின் தலைவர் மாஸ்டர் விஜய் கூறினார்.
இந்த போட்டியை வெற்றியடையச் செய்த பேராக் கராத்தே சங்கத் தலைவர் கிரேண்ட் மாஸ்டர் ஆனந்தன், மாஸ்டர் ஸ்டாலின், மாஸ்டர் ராஜன், ஆர்டிஜி பயிற்சி நிலையத்தின் தலைமை பயிற்சியாளர் மாஸ்டர் தியாக மற்றும் போட்டியில் பங்கு பெற்றவர்களுக்கு வெற்றியாளர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இந்த போட்டியில் 60 பள்ளிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பேராக் கராத்தே சங்கம் மற்றும் பேராக் இளைஞர் விளையாட்டுத்துறை இலாக்கா இந்த போட்டியை ஏற்று நடத்தியது.
43 total views, 2 views today