English Tamil Malay

 
நிலமோ,இழப்பீட்டு தொகையோ  கொடுக்க முடியாது என நில உரிமையாளர் கைவிரிப்பு !


ஆர்.தசரதன்

புக்கிட் மெர்தாஜம் ஏப் 21 புக்கிட் மெர்தாஜம்.மத்திய மாவட்டம் அல்மா தோட்ட பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஜடா முனி ஆலயத்தை அகற்ற 6 மாதம் கெடு விதித்திருப்பதாக நில உரிமையாளர் தெரிவித்துள்ளனர்.

ஆலய  நிர்வாகம் மற்றும் நில உரிமையாளரான அல்மா ரப்பர் நிறுவனத்துக்கிடையே நேற்று நடந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்து என இப்பேச்சு வார்த்தையில் கலந்துக்கொண்ட ஆலய தலைவர் ஹாரிகுமார் தெரிவித்தார்.

ஆறு மாதத்துக்குள் ஆலயத்தை வேறு இடத்துக்கு எடுத்து செல்ல வேண்டும்,6 மாத கெடு முடிந்ததும் ஆலயத்தை பயன்படுத்த அனுமதி வழங்கப்படாது என்று பேச்சுவார்த்தையில் தெரிவிக்கப்பட்டதாக ஹாரிகுமார் மேலும் கூறினார்.
80 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயமாக கருதப்படும் ஸ்ரீ ஜடா முனி ஆலயத்திற்கு   மாற்று நிலமோ அல்லது இழப்பீட்டு தொகையோ வழங்கமால் எங்களின் ஆலயத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்பதற்கு கடும் கண்டனத்தை நில உரிமையாளரிடம் தெரிவித்ததாக ஹாரிகுமார் மேலும் கூறினார்.

இதற்க்கு முன்னர் தற்போது உள்ள ஆலயத்தை வேறு ஒரு இடத்துக்கு மற்ற ஒரு நிலம் அடையாளம் காணப்பட்து என்பதுடன், அந்த நிலம் குடியிருப்பாளர்கள் வசிக்கும் வீடுகளுக்கு பின்னல் உள்ள நிலம் என்பதால் ஆலய வழிபாடு செய்ய தகுதியான இடம் என்பதால் நாங்கள் அங்கு ஆலயத்தை கொண்டு செல்ல என்னம் கொள்ளவில்லை என நில உரிமையாளரிடம் தெரிவித்து விட்டதாக ஹாரிகுமார் விவரித்தார்.

இதனிடையே பினாங்கு உயர் நீதிமன்றத்திலிருந்து நில உரிமையாளர் நியமனம் செய்த வழக்கறிஞர்  நிறுவனத்திடமிருந்து நிலத்தை காளி செய்ய வேண்டும் என்ற நோட்டிஸ் ஒன்றை ஆலய நிர்வாகத்திடம் கடந்த 19.4.2021 கிடைக்கப்பெற்றது என ஹாரிகுமார் தெரிவித்தார்.

குடியிருப்பு அல்லது ஆலயங்களை மேம்பாட்டுக்கு எடுக்கும் போது அதற்க்கான மாற்று நிலமோ அல்லது இழப்பீட்டு தொகையோ வழங்கி சுமுகமாக தீர்வுக்கான சட்டம் வழி வகுக்கின்றது,இருப்பினும் அல்மா ரப்பர் நிறுவன நில உரிமையாளர்கள் அதற்க்கு மதிப்பு அளிக்காமல் அவமதிப்பு செய்வது பொறுப்பற்ற செயல் என்று பினாங்கு மாநில இந்து இளைஞர் பேரவையின் முன்னாள் தலைவர் ஆ.ஜெயராமன் கண்டனம் தெரிவித்தார்.

ஹாரிகுமார் 

இவ்விவகாரம் தொடர்பாக பினாங்கு இந்து அறப்பணி வாரியதிடம் அதன் நிர்வாக இயக்குனர் டத்தோ ம்.இராமச்சந்திரன் பார்வைக்கு கொண்டு சென்றுள்ளதுடன்,இவ்விவகாரத்தில் இந்து அறப்பணி வாரியம் நடப்பில் உள்ள நில சட்ட தொடர்பான ஆலோசனைகளை வழங்கி எங்களுக்கு உதவ வேண்டும் என்றும் மேலும் ஜெயராமன் கேட்டுக்கொண்டார்..

ஆ.ஜெயராமன்

பிரச்சனைக்குறிய அல்மா ஸ்ரீ ஜடா முனி ஆலயம் பதிவு பெற்ற ஆலயம் என்பது குறிப்பிடத்தக்கது.

 50 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *