English Tamil Malay

ஆர்.தசரதன்

கோலாலம்பூர், ஏப் 18
நாட்டில் 125 ஆண்டுகள் பழமை வாய்ந்த செந்தூல் SRC கிளப்புக்கு கோலாலம்பூர் சிலாங்கூர் இந்தியர் வர்த்தக சங்கம் முழு ஆதரவு வழங்கும் என்று அதன் தலைவர் டத்தோ ஆர் ராமநாதன் தெரிவித்தார்.
வர்த்தகம் மற்றும தொழில் துறை வாய்ப்புகள் தொடர்பில் எங்களின் ஒத்துழைப்பை SRC நாடலாம்.

மேலும் கோலாலம்பூர் சிலாங்கூர் இந்தியர் வர்த்தக சங்கத்தில் ஒரு உறுப்பினராக src கிளப்பை சேர்த்துக் கொள்ள தயாராக இருக்கிறோம்.
இரு தரப்பினரும் ஒன்றிணைந்து பணியாற்றினால் நமது உறுப்பினர்கள் நன்மை அடைவார்கள் என்றார் அவர்
செந்தூல் SRC கிளப் மேற்கொள்ளும் திட்டங்களுக்கும் நாங்கள் ஆதரவாக இருப்போம் என்று டத்தோ ராமநாதன் தெரிவித்தார்.

SRC கிளப் ஏற்பாட்டில் நடந்த சித்திரை புத்தாண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது டத்தோ ராமநாதன் இவ்வாறு தெரிவித்தார்.
கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தின் துணைத் தலைவர் தமிழ்செல்வம், உதவித் தலைவர் டாக்டர் நவமணி ஆகியோருக்கும் இந்த விழாவில் சிறப்பு செய்யப்பட்டது.
செந்தூல் SRC கிளப் தலைவர் அன்புரோஸ் சாமிநாதன் தலைமையில் சித்திரை புத்தாண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
கோலாலம்பூர் சிலாங்கூர் இந்தியர் வர்த்தக சங்கத்துடன் இணைந்த பணியாற்றுவோம் என்று அன்பு ரோஸ் தெரிவித்தார்.

 205 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *