புத்ரா ஜெயா அக் 15
பெண்கள் விளையாட்டுகளில் ஈடுபட ஆடை விதிமுறை ஒரு தடையாக இருக்க கூடாது என இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஹன்னா இயோ கூறினார்.
திரங்கானுவில் பெண் ஜிம்னாஸ்டிக் விளையாட்டாளர்களுக்கு ஆடை விதிமுறை நிர்ணயிக்கப்பட்டுள்ள விவகாரம் குறித்து திரங்கானு ஜிம்னாஸ்டிக் சங்கத்துடன் தாம் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக அவர் குறிப்பிட்டார்.
திரங்கானுவில் பெண் ஜிம்னாஸ்டிக் விளையாட்டாளர்கள் இந்த புதிய விதிமுறையை பின்பற்றாவிட்டால், எந்தவொரு போட்டிகளிலும் கலந்து கொள்ள கூடாது என்ற நிபந்தனை வருத்தமளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
சுகன்யா,வூசு போன்ற விளையாட்டுகளில் பெண் ஜிம்னாஸ்டிக் விளையாட்டாளர்கள் கலந்து கொள்ள முடியாது என அண்மையில் திரங்கானு ஜிம்னாஸ்டிக் சங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனிடையே தேசிய விளையாட்டு மன்றத்தின் வழி இப்பிரச்சனைக்கு தீர்வு காண திரங்கானு ஜிம்னாஸ்டிக் சங்கத்தின் தலைவர் அப்துல் ரசாக் மாட் அமினுடன் தாம் தொடர்பு கொண்டுள்ளதாக சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹன்னா தெரிவித்தார்.
இளைஞர்கள் தாங்கள் விரும்பும் விளையாட்டுக்களில் பங்கு பெற நாம் ஊக்குவிப்பு வழங்க வேண்டும். இதற்கு ஆடை விதிமுறை எந்த வகையிலும் தடையாக இருக்கக் கூடாது என அவர் சுட்டிக் காட்டினார்.
இதனடையே மலேசிய விளையாட்டு மன்றத்தின் புதிய தலைமை இயக்குனரின் பெயர் இம்மாத இறுதியில் அறிவிக்கப்படும் என அவர் சொன்னார்.
மலேசிய விளையாட்டு மன்றத்தின் தலைமை இயக்குனர் டத்தோ சப்பாவி இஸ்மாயில் கடந்த செப் 28 ஆம் தேதி பதவி ஓய்வு பெற்றார்.
43 total views, 2 views today