English Tamil Malay

சியோல் செப் 6
9 ஆவது உலக சமாதான உச்சநிலை மாநாடு
எதிர்வரும் செப் 18 ஆம் தேதி செப் 20 ஆம் தேதி வரை தென் கொரியா தலைநகரான சியோல் மாநகரில் நடைபெற உள்ளது.

சியோல் நகரில் மையமாகக் கொண்ட HWPL உலக சமாதான இயக்கம் இந்த உச்ச நிலை மாநாட்டை வழி நடத்துகிறது.

செப் 18 ஆம் தேதி தொடக்கம் இந்த உச்ச நிலை மாநாட்டில் உலகளாவிய சேர்ந்த அரசியல் தலைவர்கள், சமய தலைவர்கள், அரசாங்க பிரதிநிதிகள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் சமுதாய தலைவர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த சுமார் 2,000 பேராளர்கள் இந்த உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்வர்.
இந்த உச்சநிலை மாநாட்டிற்கு இரண்டாம்உலக போர் ராணுவ வீரரும் HWPL இயக்கத்தின் தலைவருமான லீ மான் ஹி தலைமையேற்கிறார்.

இந்த இயக்கத்தின் முதலாவது சமாதான உச்சநிலை மாநாடு கடந்த 2014 ஆம் ஆண்டில் சியோல் நகரில் நடைபெற்றது.
உலகளவில் அமைதியை நிலை நிறுத்துவது, போர் நிறுத்தம், அனைத்து சமயங்களுக்கிடையே நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் புரிந்துணர்வை ஏற்படுத்துவதே இந்த உச்சநிலை மாநாட்டின் நோக்கமாகும்.

இந்த நோக்கில் உலகளவில் 119 நாடுகளில் HWPL தனது கிளைகளை அமைத்து உலக சமாதானத்திற்காக செயல்பட்டு வருகிறது.
இந்த இயக்கத்தின் தலைவர் Lee Man-hee உலக சமாதானத்தை நிலை நாட்ட கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் உலக நாடுகளை வலம் வந்துள்ளார்.

 143 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *