கோலாலம்பூர் ஆக 24-மலேசியாவைச் சேர்ந்த யோகிஷா தனபாலன் மற்றும் தேவசேனா ஈஸ்வரன் சென்னை பொது கராத்தே போட்டியில் பங்கு பெறச் சென்னை புறப்பட்டனர்.
இந்த கராத்தே போட்டி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டையில் நடைபெறுகிறது.இவர்களை கோம்பாக் மாவட்ட இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அதிகாரி நரேஸ் குமார் வழி அனுப்பி வைத்தார்.
ஜாலான் புக்கிட் இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த யோகிஷா இந்த போட்டியில் 47கேஜி காத்தா பிரிவில் பங்கேற்கிறார்.மலாயா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தேவசேனா ஈஸ்வரன் 69கேஜி காத்தா பிரிவில் பங்கேற்கிறார்.தாமான் செலாயாங் இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த ரிஷாலினி குமார் இவ்விருவரின் பயிற்சியாளராக உடன் சென்றுள்ளார்.
இந்த கராத்தே குழுவிற்கு மலாயா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரிஷாலினி குமார் குழு நிர்வாகியாக உடன் சென்றுள்ளார்.
64 total views, 2 views today