கோலாலம்பூரில் ஜூலை 18-முன்னாள் தேசிய கால்பந்து பயிற்றுநர் பி.சத்தியநாதன் வயது 65 புற்று நோய் காரணமாகச் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
கடந்த ஓர் ஆண்டுக்காலமாகப் புற்று நோயினால் போராடிக்கொண்டிருந்த அவர் இன்று உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது,
ஹாரிமாவ் மலாயா தேசிய கால்பந்து குழுவிற்குத் தேசிய பயிற்றுநராக 2007 முதல் 2009 வரை இருந்து வந்த அவர்,23 வயதுக்கு உட்பட்ட இளையோர் கால்பந்து அணியின் பயிற்றுநராக 2006 முதல் 2008 வரை அவர் பொறுப்பு வகித்து வந்துள்ளார்.ச02006 ஆம் ஆண்டு 23 வயதுக்கு உட்பட்ட இளையோர் கால்பந்து அணியினர் 2007 ஆம் ஆண்டு பெஸ்தா போலா கால்பந்து விளையாட்டில் செம்பியன் ஆனதுடன்,2008 ஆம் ஆண்டு இரண்டாம் நிலை வெற்றியாளராக இளையோர் கால்பந்து அணி வெற்றி பெற்றது அன்னாரின் கால்பந்து பயிற்சியினால் என்பது குறிப்பிடத்தக்கது.
2010 ஆம் ஆண்டு கிளந்தான் கால்பந்து குழுவின் தலைமை கால்பந்து பயிற்றுநராக இருந்த போது கிழான்தான் கால்பந்து அணி மலேசியக் கால்பந்து கிண்ணத்தை 2010 ஆம் ஆண்டு வெற்றிகொண்டது.
எடிஎம் கால்பந்து அணி மற்றும் பெல்டா யுனைட்டட் ஆகிய இரு கால்பந்து அணிகளின் பயிற்றுநராக இருந்த பி.சத்தியநாதன் 2012 ஆம் ஆண்டும்,2018 ஆம் ஆண்டு மலேசியா லீகா பெர்டானா கால்பந்து விளையாட்டில் அந்த இரு அணிகள் சம்பின் ஆகி வெற்றியாளராக உருவாகின.
20017 ஆம் ஆண்டு மலேசியக் கால்பந்து சங்கத்தின் சிறந்த கால்பந்து பயிற்றுநருக்கான விருதையும் பி.சத்தியநாதன் வென்றுள்ளார்.
அன்னாரின் பிரிவால் துயருறும் அவர் குடும்பத்தினர்,மலேசியக் கால்பந்து இரசிகர்கள் அனைவருக்கும் அலை ஒளி ஊடகத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
77 total views, 1 views today