சத்திஸ் முனியாண்டி திறந்து வைத்தார்.
பட்டர்வொர்த்ஜூன் 19 பினாங்கு இந்திய விளையாட்டு மன்றத்தின் 35வது பூப்பாந்தாட்டப் போட்டி அண்மையில்,பட்டர்வொர்த்,மாக் மண்டின் ஆங் சி சோங் சூ மண்டபத்தில்,மன்றத்தின் தலைவர் மு.கார்தி அவர்களின் தலைமையில்,பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்திஸ் முனியாண்டி போட்டியளர்களை உட்சாகப்படுத்தி அதிகாரப்பூர்வமாகத் பூப்பந்தாட்டப் போட்டியை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
கடந்த ஆண்டைப் போலவே பினாங்கு மற்றும் கெடா மாநிலத்திலிருந்து திறன் பெற்ற பல்லினத்துப் போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.
6 வயது முதல் 16 வயதுடைய பள்ளி மாணவ,மாணவிகள் ஒற்றையர் ஆட்டங்களில் பங்கேற்ற வேளையில்,பெரியவர்களுக்கான ஆண்கள் இரட்டையர்,கலப்பு இரட்டையர் எனப் பல பிரிவுகளிலும் போட்டிகள் நடைபெற்றன.
வெற்றி பெற்ற விளையாட்டாளர்களுக்குக் கவர்ச்சிகரமான வெற்றிக் கோப்பைகள்,ரொக்கம்,தோல் பைகள் ஆகியவை வழங்கப்பட்டன.பினாங்கு இந்திய விளையாட்டு மன்றத்தின் தலைவரான மு.கார்த்தி பேசுகையில்,இம்முறை கணிசமான எண்ணிக்கையில் விளையாட்டாளர்கள் பங்கேற்றனர் என்றார்.மேலும் தொடர்ந்து பேசிய அவர்,இந்திய மாணவர்கள் பிற இன மாணவர்களுக்கு ஈடாகச் சற்றும் சளைக்காமல் அசத்தலான ஆட்டங்களை வெளிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குறியநு என்றார் அவர்.
ஆண்டு இறுதியில் 36வது பூம்பாந்தாட்டப் போட்டியை ஏற்று நடத்துவதற்கு மன்றம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் விவரித்தார்.
இவ்வேளையில் நல்லாதரவையும்,ஒத்துழைப்பையும் வழங்கிய மன்ற உறுப்பினர்களுக்கும் ஏனைய அன்பர்களுக்கும் தமது மனமார்ந்த நன்றியை அவர் தெரிவித்துக்கொண்டார்.
103 total views, 1 views today