English Tamil Malay

புத்ரா ஜெயா மார்ச் 30-மனித வள அமைச்சின் கீழ் இயங்கும் எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் தொழில் திறன் பயிற்சி திட்டங்கள் தொடரப்பட வேண்டும் என மனிதவள அமைச்சர் வ.சிவகுமார் கூறினார்.

அரசாங்கம் தனது இலக்கை அடைய எச்ஆர்டி கோர்ப் பயிற்சி திட்டங்கள் பெரும் பங்களிப்பை வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

எச்ஆர்டி கோர்ப் செயல் திட்டங்கள் குறித்து நேற்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்ட விளக்கக் கூட்டத்தில் அவர் பேசினார்.

2001 ஆம் ஆண்டு மனித வள மேம்பாட்டு நிறுவன சட்டத்தின் கீழ்ப் பகுதி வாய்ந்த முதலாளிகளிடமிருந்து எச்ஆர்டி கோர்ப் லெவி கட்டணத்தை வசூலித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தகுதியான நிறுவனங்களுக்கு இந்த லெவி கட்டணம் கட்டாயப்படுத்தப்படுகிறது.இதன் வழி கிடைக்கும் நிதியைக் கொண்டு தொழில் திறன் பயிற்சிகளை எச்ஆர்டி கோர்ப் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

இந்த விளக்கக் கூட்டத்தில் பாகான் எம்பி லிம் குவான் எங், ஈப்போ பாராட் எம்பி எம். குலசேகரன், கிள்ளான் எம்பி கணபதி ராவ்,ஜெலுத்தோங் எம்பி ராயர் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.கலந்துகொண்டு அனைவருக்கும் எச்ஆர்டி கோர்ப் செயல் திட்டங்கள் குறித்து அதன் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ சாஹுல் ஹாமிட் விரிவாக விளக்கமளித்தார்.

 84 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *