English Tamil Malay

கோலாலம்பூர் மார்ச் 28 கம்போடியாவிலிருந்து வீட்டுப் பணிப்பெண்கள் மற்றும் இதர துறைகளில் அந்நிய தொழிலாளர்களைத் தருவிக்க அந்நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்திட்டது.

இந்த இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்த கையெழுத்து சடங்கை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மற்றும் கம்போடியா பிரதமர் ஹன் சேன் பார்வையிட்டதாக மனிதவள அமைச்சு வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

நேற்று அன்வாரின் ஒரு நாள் கம்போடியா பணி பயணத்தில் மனிதவள அமைச்சர் வ.சிவகுமாரும் கலந்து கொண்டார்.இந்த இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் 5 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என அந்த அறிக்கை கூறியது.

இந்த இரண்டு துறைகளுக்குக் கடந்த 2015 ஆம் ஆண்டில் கம்போடியாவுடன் கையெழுத்திடப்பட்டு 2020 ஆம் ஆண்டு டிசம்பரில் முடிவுற்றது.தற்போது கம்போடியாவிலிருந்து 4,422 தொழிலாளர்கள் மலேசியாவில் பணிபுரிந்து வருகின்றனர்.

 88 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *