English Tamil Malay

கோலாலம்பூர் மார்ச் 14-மலேசியக் குற்றத் தடுப்பு அறவாரியத்தின் உச்ச மன்ற உறுப்பினராக டத்தோ ஸ்ரீ க.புலவேந்திரன் தேர்வு பெற்றார். கடந்த சனிக்கிழமை செராஸ் காவல் துறை கல்லூரியின் சுல்தான் ஹாஜி அமாட் ஷா மண்டபத்தில் நடைப்பெற்ற மலேசிய குற்றத்தடுப்பு அறவாரியத்தின் 29,30வது ஆண்டு கூட்டத்தில் டத்தோ ஸ்ரீ்க.புலவேத்திரன் உச்சமன்ற உறுப்பினராக தேர்வு பெற்றார்.

மொத்தம் 17 பேர் கொண்ட இந்தச் செயலவைக்கு உள் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைப்ஃடின் நசுத்தியோன் இஸ்மாயில் தலைவராகவும் காவல் துறை தலைவர் டத்தோ ஸ்ரீ அக்ரில் சானி ஹாஜி அப்துல் சானி தலைவராகவும் கொண்ட குற்றத்தடுப்பு அறவாரியத்தினல் டத்தோ ஸ்ரீ் க.புலவேந்திரன் மட்டுமே ஒரே இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டத்தில் நடைபெற்ற தேர்தொழில் உள் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சாய்புடன் நசோதியோன் சிறப்புப் பிரமுகராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

2023-2026 ஆண்டுக்கான ஆச்சி மன்ற உறுப்பினர்களின் தேர்வில்,பினாங்கு மாநில குற்றத் தடுப்பு அறவாரியத்தின் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ க.புலவேந்திரன் தேர்வு பெற்றார்.இந்த குற்றப் பிரிவு அறவாரியத்தின் ஆச்சி மன்ற உறுப்பினராகத் தேர்வு பெற்ற இந்தியர் இவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அவர் 2003 ஆம் ஆண்டு முதல் இதன் உறுப்பினராக இருந்து வருவதுடன் 2016 ஆம் ஆண்டு முதல் பினாங்கு மாநில குற்றத்தடுப்பு அறவாரியத்தின் உதவித் தலைவராகவும் 2017 முதல் இப்போது வரை மாநில துணைத் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.

இதற்கு முன்னர் 2018 முதல் 2020 முதல் மலேசிய குற்றத்தடுப்பு அறவாரியத்தின் தேசிய உதவித் தலைவராகவும் பணியாற்றிய வந்துள்ள அவர் பினாங்கு மாநில சமூக நல இயக்கங்ளுக்கும்,ஆலயங்களுக்கும் அறங்காவலராகவும் பெர்மாத்தாங் திங்கி தமிழ்பள்ளியின் மேலாளர் வாரியத் தலைவராக இருந்து சமூகப் பணியாற்றி வருகிறார்.

இந்தியச் சமூகம் எல்லா துறைகளிலும் முன்னேற்றம் கான வேண்டும்,தமிழ்ப்பள்ளி மாணவர்கள் உலகின் உச்சத்தை அடைய வேண்டுமெனும் வேட்கையும்,இந்திய இளைஞர்கள் சிறைகளில் தங்களின் காலத்தைக் கழிக்காமல் சமூக காவலர்களாக,மொழி பற்றாளர்களாக தங்களின் குடும்பங்களை ஒரு முன்னேற்ற கரமான பாதைக்கு இட்டுச் செல்லுபவர்களாகவும்,இறைச் சிந்தனை மிக்கவர்களாக இருக்க வேண்டுமெனத் தனது மேடைப் பேச்சுகளில் வலியுறுத்திக் கூறி வருவார்.

பெர்மாத்தாங் தமிழ்ப்பள்ளியின் மேலாளர் குழுவின் தலைவராக இருந்து அந்த தமிழ்ப்பள்ளியின் இனை கட்டடம் கட்டுவதற்கு அரும் பாடு பட்டவர் இவர்.
முடிந்த உதவிகளைப் பிறருக்குச் செய்ய வேண்டும் எனும் கொள்கை உடையவர்,இருப்பதை மற்றவர்களுக்குக் கொடுக்கின்ற பொன் மனத்தால் பிறர் உள்ளங்களில் சிறந்த பண்பாளராகத் திகழ்ந்து வருகிறார் டத்தோ ஸ்ரீ க.புலவேந்திரன்.

மலேசியக் குற்றத் தடுப்பு அறவாரியத்தின் தேசிய உச்ச மன்ற உறுப்பினராகத் தேர்வு பெற்ற டத்தோ ஸ்ரீ க.புலவேந்திரனுக்கு அலை ஒளி ஊடகத்தின் இனிய வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.

 127 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *