பட்டர்வொர் 8 மார்ரபினாங்கு இந்தியர் விளையாட்டு மன்றத்தின் ஏற்பாட்டில் 34-வது பூப்பந்தாட்டப் போட்டி அண்மையில் சை லேங் பார்க், பல்நோக்கு மண்டபத்தில், மன்றத்தின் தலைவர் மு.கார்த்தி அவர்களின் தலைமையில், பினாங்கு மாநில துணை முதலமைச்சரும்,பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவருமான மாண்புமிகு பேராசிரியர் ப. இராமசாமி அவர்களின் பேராதரவில் வெகுச் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடைப்பெற்று முடிந்தது.பட்டர்வொர் 8 மார்ரபினாங்கு இந்தியர் விளையாட்டு மன்றத்தின் ஏற்பாட்டில் 34-வது பூப்பந்தாட்டப் போட்டி அண்மையில் சை லேங் பார்க், பல்நோக்கு மண்டபத்தில், மன்றத்தின் தலைவர் மு.கார்த்தி அவர்களின் தலைமையில், பினாங்கு மாநில துணை முதலமைச்சரும்,
கூடுதல் அலுவல் பணி நிமித்தம் துணை முதலமைச்சர் அவர்கள் கலந்து கொள்ள முடியாமல் போனதால், அவரது பிரதிநிதியாக பாகான் டாலம் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு சதீஷ் முனியாண்டி அவர்கள் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாண்புமிகு அவர்கள் போட்டிகளில் பங்கேற்ற விளையாட்டாளர்களுக்கு உற்சாகமளிக்கும் வகையில் சிறப்புரையாற்றிய பின்னர் போட்டியை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார். அவரோடு சமூக ஆர்வலரும், மன்றத்தின் ஆலோசகருமான மேன்மைமிகு டத்தோ சவுந்தரராஜன் அவர்களும் சிறப்பு விருந்தினராய் கலந்து கொண்டு சிறப்புச் சேர்த்தார்.
கடந்த ஆண்டுகளைப் போலவே இவ்வாண்டும் பினாங்கு மற்றும் கெடா மாநிலங்களிலிருந்து பல்லினத்தைச் சார்ந்த ஏராளமான திறம் படைத்த போட்டியாளர்கள் பங்கேற்றனர். 7 வயது முதல் 16 வயது வரைக்கும் உட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் ஒற்றையர் ஆட்டங்களில் பங்கேற்ற வேளையில் பெரியவர்களுக்கான கலப்பு இரட்டையர் என பல பிரிவுகளிலும் போட்டிகள் நடைப்பெற்றன.
வெற்றி பெற்ற விளையாட்டாளர்களுக்கு கவர்ச்சிகரமான வெற்றி கோப்பைகள், ரொக்கம், தோள் பைகள் ஆகியவை வழங்கப்பட்டன.
பினாங்கு இந்தியர் விளையாட்டு மன்றத்தின் தலைவர் மு. கார்த்தி பேசுகையில், தற்போது பள்ளி விடுமுறை காலம் என்பதால் கணிசமான எண்ணிக்கையில் விளையாட்டாளர்கள் பங்கேற்றனர் என்றார்.
மேலும் பேசிய அவர் தாங்கள் ஏற்பாடு செய்திருந்த பல போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்ற சில விளையாட்டாளர்கள் இன்று மாநிலத்தை பிரதிநிதிக்கும் நிலைக்கு தங்கள் தகுதியை வளர்த்துக் கொண்டுள்ளனர் என்றும் இன்னும் ஒருசிலர் பயிற்சியாளராக உருவெடுத்துள்ளனர் என்றும் தமது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
ஆண்டு மத்தியில் 35-வது பூப்பந்தாட்டப் போட்டியை நடத்துவதற்கு மன்றம் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறினார். இவ்வேளையில் நல்லாதரவையும் ஒத்துழைப்பையும் நல்கிய மன்ற உறுப்பினர்களுக்கும் ஏனைய அன்பர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றிதனை தெரிவித்துக் கொண்டார்.
163 total views, 2 views today