English Tamil Malay

சிரம்பான் ஜெயா ஜன 29
சிரம்பான் ஜெயா சட்டமன்ற அலுவலக ஏற்பாட்டில் பொங்கல் கொண்டாட்ட விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
பாக்காத்தான் ஹராப்பான் சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி. குணசேகரன் தலைமையில் நடந்த இந்த பொங்கல் கொண்டாட்ட விழாவில் ராசா நாடாளுமன்ற உறுப்பினர் சா கீ சின், செனட்டர் டத்தோ ஏகே தாஸ், இந்து தர்ம மாமன்ற தலைவர் முத்து, சிராம்பான் லோரி ஓட்டுநர்கள் நல சங்க உதவி தலைவர் குமரன், ஜெம்போல் நகர் ஆண்மைக் கழக உறுப்பினர், பெருமாள்,ராசா நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்பு அதிகாரி காளிதாசன், சிராம்பான் மாநகர் மன்ற உதவியாளர்கள் மின்னல், முகுந்தன், சிரம்பான் சட்டமன்ற அலுவலக உதவியாளர்கள் ஸ்மிதா, செல்வி உட்பட அதிகமானோர் கலந்து கொண்டனர்.

இந்த கொண்டாட்டத்தில் 25 பேர் பொங்கல் போட்டிகளில் பங்கு பெற்றனர்.
இந்த பொங்கல் சமையல் பங்கு பெற்றோர்களுக்கு முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட சிறார்கள் முறுக்கு வழங்கப்பட்டுள்ளது உணவுகளும் பரிமாறப்பட்டது.

இதனிடையே இந்துக்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் கொண்டாட்டம் பல இனங்களுக்கு இடையே புரிந்துணர்வு மட்டும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் என குணா குறிப்பிட்டார்.

இது போன்ற கொண்டாட்டங்கள் நாடு தழுவிய நிலையில் கொண்டாடப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

உழவர்கள் திருநாளான உங்கள் கொண்டாட்டம் நமக்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தும் என அவர் சொன்னார்.

 154 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *