English Tamil Malay

கோத்தோங் ஜெயா நவ 9
தங்களின் ஊழியர்கள் வாக்களிக்கச் செல்ல இந்நாட்டில் உள்ள முதலாளிகள் நவ 19 ஆம் தேதி விடுமுறை வழங்க வேண்டும் என முன்னாள் மனிதவலம் அமைச்சர் எம். குலசேகரன் வலியுறுத்தினார்.

வாக்காளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க இது ஏதுவாக இருக்கும் என அவர் சொன்னார்.
நேற்று இங்கு பாக்காத்தான் ஹராப்பான் பெந்தோங் நாடாளுமன்ற வேட்பாளர் யோங் செப்பூராவிற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தின் போது ஈப்போ பாராட் நாடாளுமன்ற வேட்பாளருமான அவர் குறிப்பிட்டார்.

மக்களின் நலங்களில் அக்கறை கொள்ளாமல் மழைக்காலத்தில் இந்த பராமரிப்பு அரசாங்கம் 15 வது பொது தேர்தலை நடத்துவதாக அவர் சுட்டிக் காட்டினார்.

ஊழல் வழக்குகளிலிருந்து தப்பித்துக் கொள்ள அம்னோ தலைவர்கள் அவசர அவசரமாக இந்த பொது தேர்தலை நடத்துகின்றனர்.

வெள்ள காலத்திலும் பொது தேர்தலை நடத்தலாம் என இந்த ஊழல் மிக்க தலைவர்கள் பிடிவாதமாக இருந்து வருகின்றனர் என அவர் சொன்னார்.

இந்த நிலையில் ஒவ்வொருவரும் தங்களின் வாக்களிக்கும் உரிமையை முழுமையாக பயன்படுத்த வேண்டும்.
காரணம் நாட்டில் நல்லாட்சி மலர இந்த பொதுத் தேர்தல் பாக்காத்தான் ஹராப்பான் வெற்றி பெற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

ஆகையால் தேர்தல் திறமான நவ 19 ஆம் தேதி இந்நாட்டில் உள்ள முதலாளிகள் தங்களின் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என்றார் அவர்.

அன்றைய தினம் ஊழியர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று தவறாமல் வாக்களிக்க வேண்டும் என ஜசெக உதவித் தலைவருமான அவர் சொன்னார்.

இந்த பொது தேர்தலில் ஊழல் மிக்க நடப்பு அரசாங்கத்தை மக்கள் நிராகரிக்க வேண்டும்.

இந்த தேர்தல் நடைபெறுவதை எதிர்க்கட்சிகள் மற்றும் இந்நாட்டு மக்களும் விரும்பவில்லை.

இருப்பினும் எந்த கால கட்டத்திலும் பொது தேர்தலை சந்திக்க பாக்காத்தான் ஹராப்பான் தயார் நிலையில் இருந்து வந்துள்ளதாக குலா தெரிவித்தார்.

 128 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *