English Tamil Malay




ஆர்.தசரதன் 

பட்டர்வொர்த் பினாங்கு மாநில இந்தியர் விளையாட்டு மன்றத்தின் ஏற்பாட்டில் 31- வது பூப்பந்தாட்டப் போட்டி அண்மையில் சிறப்புடன் நடைப்பெற்றது.இப்போட்டி  பட்டர்வொர்த்,மாக் மனடின் ஆங் சி சோங் சூ மண்டபத்தில்,மன்றத்தின் தலைவர் மு.கார்த்தி அவர்களின் தலைமையேற்றார்.

பினாங்கு மாநில இளைஞர் விளையாட்டு துறையின் ஆட்சிக்குழு உறுப்பினர் சூன் லிப் சி மற்றும் நாவா செர்விஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர திருமதி சரளாதேவி அரவிந் அவர்களின் ஆதரவில் இந்த பூப்பந்தாட்டப் போட்டி வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.

கடந்த ஆண்டுகளை போலவே இவ்வாண்டும் பினாங்கு மற்றும் கெடா ஆகிய மாநிலங்களிருந்து பல்லினத்தை சேர்ந்த ஏராளமான திறம் படைத்த போடடியாளர்கள் பங்கேற்றனர். 6 முதல் 18 வயது வரைக்கும் உட்பட்ட பள்ளி மாணவ,மாணவிகள பங்கேற்ற ஒற்றையர் ஆட்டங்கள் ஆறு பிரிவுகளாக நடைபெற்றன. 
வெற்றி பெற்ற விளையாட்டாளர்களுக்கு கவர்ச்சிகரமான வெற்றி கோப்பைகள்,ரொக்கம்,சான்றிதழ்கள்,டி-சட்டடைகள் தோல் பைகள் ஆகியவை வழங்கப்பட்டன.

விளையாட்டாளர்களை பொறுத்த வரையில் தங்களது அபாரத் திறமைகளால் மற்ற இனப் போட்டியாளர்களை வென்று பரிசுகளை தட்டிச்  சென்றது உண்மையிலேயே பாராட்டப்பட பட வேண்டிய அம்சமாகும் என தனது மகிழ்ச்சியைப் பகிர்த்துக்கொண்டார் மாநில  இந்தியர் விளையாட்டு மன்றத்தின் தலைவர் மு.கார்த்தி.
இப்பூப்பந்தாட்ட போட்டியில் குறிப்பாக  11 வயது நிரம்பிய யோகேஸ்வரன் 12 வயதுக்கு உட்பட்ட பிரிவில் வெளிப்படுத்திய அசத்தலான ஆட்டங்கள் பார்வையாளர்களின் கவனத்தி ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தது.

பினாங்கு இந்தியர் விளையாட்டு மன்றதின் தலைவர் மு.கார்த்தி தமதுரையில் குறிப்பிடுகையில்,கோவிட்-19 தொற்று நோய் காரணத்தினால் மாநில  எல்லைகளை கடந்து போட்டியில்   கலந்துக்கொள்ள சிரமத்தை எதிர்நோக்கிய விளையாட்டாளர்களுக்கு மன்றம் வழங்கிய கடிதம் வாயிலாக காவல் துறையின்  அனுமதி பெற்று கெடா மாநிலத்தைச் சேர்ந்த பல விளையாட்டாளர்கள் பூப்பந்தாட்டப் போட்டியில் பங்கேற்றனர் என்பதை தெரிவித்தார்.

மேலும் அவர் தமதுரையில் 32-வது பூப்பந்தாட்டப் போடடியை நடத்துவதற்கு திட்டமிட்டடிருப்பதாக கூறிய அவர் இவ்வேளையில் நல்லதரவும்,ஓத்துழைப்பையும் நல்கிய மன்ற உறுப்பினர்களுக்கும் ஏனைய அன்பர்களுக்கும் தமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

 264 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *