English Tamil Malay

சிரம்பான் ஜெயா அக் 19
தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு சிராம்பான் ஜெயா வட்டாரத்தில் உள்ள 115 வசதி குறைந்த குடும்பங்களுக்கு பக்காத்தான் ஹராப்பான் சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி. குணசேகரன் தீபாவளி அன்பளிப்பு பொருட்களை வழங்கினார்.

விரைவில் தீபாவளியை கொண்டாடவிருக்கும்இந்த குடும்பங்களுக்கு இந்தப் பொருள் உதவி அவர்களின் சுமைகளை சற்று குறைக்கும் என தாம் நம்புவதாக குணா குறிப்பிட்டார்.

தாமான் துவாங்கு அம்புவான் நஜிஹாவை சேர்ந்த 70 குடும்பங்களுக்கும் மற்றும் தாமான் ஸ்ரீ கம்பானை கேளுங்கள் 45 குடும்பங்களுக்கும் உதவி பொருட்கள் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த தீபாவளியை இவ்வட்டாரத்தில் உள்ள இந்துக்கள் சீராகவும் சிக்கனமாகும் கொண்டாட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஹருன் தலைமையிலான மாநில பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் வசதி குறைந்த மக்களுக்கு தொடர்ந்து உதவிகளை வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் சிராம்பான் நகரமைக் கழக உறுப்பினர் மின்னல், தாமான் துவாங்கு ஜாபார் கிளை தலைவர் சூரியா, ஸ்ரீ கம்பானை சேர்ந்த சிவா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 133 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *